தம்பலகம பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்


 (mahroof nifras)

இன்று டெங்கு காய்ச்சல் நோயினால் சுமார் 20 பேர் அளவில் தம்பலகம பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் தம்பலகம பிரதேச செயலாளர் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் விசேட கூட்டத்தின் தீர்மானத்திற்கமைய ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஐந்து குழுக்கள் வீடுகள்,மற்றும் பொது இடங்கள் பார்வையிட அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் பொதுச்சுகாதார பரிசோதகர்,கிராம உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,பொலிஸ், ஆர்மி,பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் இக்குழுவில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இத்திட்டத்தை அனைத்து உத்தியோகத்தரும் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து மக்களுக்கு தெளிவான விளக்கத்தையும் விழிப்புணர்வுகளை அளித்து டெங்கு இல்லாத பிரதேசமாக கொண்டு வரவேண்டும் எனவும் வேண்டிக்கொள்ளப்பட்டது.

( அன்வார்தீன்)






Comments