இலங்கையர்களே அவசர எச்சரிக்கை! கடைகளில் இதனை வாங்க வேண்டாம்!


அரிசியை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் அவதானமாக இருக்க வேண்டுமென பொலன்னறுவை சிறுநீரக நோய் தடுப்பு பிரிவு வைத்தியர் மாலின் மெத்சூரிய தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரிசி ஆலை உரிமையாளர்கள், கொள்வனவு செய்யும் அரிசியை குறைந்தது ஐந்து ஆண்டுகள்வரை பயன்படுத்துவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் அதிக விஷத்தன்மையுள்ள இரசாயனங்களை பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், குறித்த அரிசியை கொள்வனவு செய்யும் பொது மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் பல புதிய சிறுநீரக நோயாளிகள் கண்டறிப்படுவதாகவும், சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களில், பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவு பொருட்களை பாதுகாப்பதற்காக அதிக விஷத்தன்மையுள்ள இரசாயனங்கள் பயன்படுத்திவரும் நபர்களை கைது செய்வது தொடர்பிலும், இந்த நிலையை நிலைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments