ஹஸன் அலியின் வேத­னையை ஆமோ­திக்­கிறேன்

நிந்­தவூர் கூட்­டத்தில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்
ஹஸன் அலி வேத­னை­யுடன் இருக்­கிறார். அவர் கூட்டம் நடத்­து­வதை நாங்கள் ஆமோ­திக்­கிறோம்.

ஆனால், ஒரு தனி­ம­னி­தனின் வேத­னையை பக­டைக்­கா­யாக வைத்து ஊர் ஊராக பிர­சாரம் செய்­யப்­போ­வ­தாக சிலர் சித்து விளை­யாட்டு காட்­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்‌ தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் நிந்­தவூர் கிளையின் கூட்­டமும், நிந்­தவூர் அபி­வி­ருத்தி தொடர்­பான கலந்­து­ரை­யா­டலும், நிந்­தவூர் பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பினர் ஜப்பார் அலி தலை­மையில் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை இரவு நிந்­தவூர் பிர­தேச சபையின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்தில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது, நேற்று நிந்­த­வூரில் நடை­பெற்ற கூட்­டத்­துக்கு பதில்­கூறும் கூட்‌­ட­மாக இது நடத்­தப்­ப­ட­வில்லை. கண்­டியில் நடை­பெற்ற மக்கள் பிர­தி­நி­திகள் செய­ல­மர்வில், உள்­ளூ­ராட்சி மன்ற பிர­தி­நி­தி­க­ளுக்கு மாதத்­துக்கு 4 சிறிய கூட்­டங்­களை நடத்­து­மாறு கூறி­யி­ருந்தேன்.

அதில் முத­லா­வது கூட்­ட­மாக எனது கூட்­டத்­துக்கு வர­வேண்டு­மென நிந்­தவூர் பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பினர் ஜப்பார் அலி என்­னிடம் கேட்­டுக்­கொண்டார். அதன் பிர­கா­ரம்‌தான் இக்­கூட்டம் நடை­பெ­று­கி­றது.

இந்தக் கட்­சியை வழி­ந­டத்­து­வ­தாக இருந்தால் குரு­ட­னா­கவும், செவி­ட­னா­கவும் இருந்­தாக வேண்டும் என்று மறைந்த தலைவர் கூறுவார். சில­வேளை என்று அதனை திருத்­து­கிறார். நான் செவி­ட­னா­கவே இருந்­து­விட்டு போனால் என்ன என்றும் யோசித்­தி­ருக்­கிறேன். நேற்று நடந்த விடயம் பற்றி 8 மாதங்­க­ளுக்கு முன்­னரே எனக்குத் தெரியும். அதற்­கான முஸ்­தீ­புகள் நடை­பெற்­றது விளங்­காத ஒரு விட­ய­மல்ல.

கடந்த மாகாண சபைத் தேர்­தலில் திடீ­ரென செயார்மன் (தவி­சாளர்) சங்கம் என்­றொரு குழுமம் உரு­வா­கி­யது. இந்த சங்கம் உரு­வா­னதன் பின்னணியில் ஒரு வர­லாறு இருக்­கி­றது. இந்த சங்கம் படுத்­திய பாடு பொல்­லாத பாடு. சில வாக்­கு­று­தி­களை தந்து, அவற்றை நிறை­வேற்­றக்­கூ­டாது என்று சொன்­ன­வர்­கள்தான், இப்­போது அதில் பட­மெ­டுத்து ஆடு­கி­றார்கள். 

கல்­முனை மாந­க­ர­சபை முதல்வர் பதவி பங்­கீடு, இறக்­காமம் பிர­தேச தவி­சாளர் பதவி பங்­கீடு என்­பன தலை­வ­ருக்கு முன்னால் செய்­யப்­பட்ட உடன்­பாடு.

அதில் இரு­த­ரப்பும் இணக்கம் கண்­டி­ருந்­தார்கள். ஆனால், கட்­சி மக்­க­ளுக்கு கொடுத்த இந்த வாக்­கு­று­தி­களை தடுப்­ப­தற்கு செயார்மன் சங்­கத்­த­வர்கள் ஆளாய் பறந்­தனர். அதன் பின்னால் சில தேவைப்­பா­டுகள் இருந்­தன. அதற்­காக அவர்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டார்கள்.

நான் பிரம்பு எடுக்­கப்­போனால் கட்­சியில் ஒரு­வரும் இருக்­க­மாட்­டார்கள். இப்­போது அவர்கள் எனக்கே பிரம்பு எடுத்­தி­ருக்­கி­றார்கள். இந்த விவ­காரம் மிகப்­பெ­ரிய அசிங்­க­மாக மாற்றுத் தரப்­பி­லி­ருந்து உந்­து­சக்­தி­யுடன் பார்க்­கப்­ப­டு­கி­றது. கூட்­டத்­துக்கு  முன்னால் நின்­று­கொண்டு கூப்­பாடு போட்­ட­வர்கள் முஸ்லிம் காங்­கி­ரஸ்­கா­ரர்கள் அல்ல.

அவர்­க­ளு­டைய உள்ளூர் தலை­மை­களை ஆட்சிக் கதி­ரையில் அமர்த்­த­வேண்டும் என்று ஆசைப்­ப­டு­ப­வர்கள். இவர்கள் சிறி­ய­தொரு வட்­டத்தை போட்­டுக்­கொண்டு அதுதான் கட்சி என்று நினைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இதை­யெல்லாம் அலட்­டிக்­கொள்­வது ஒரு பல­மான தலை­மைக்கு பல­வீ­ன­மா­னது. இதன் பின்­னா­லி­ருக்கும் சூட்­சு­மங்­களும்‌, தந்­தி­ரங்­களும் தெரி­யாமல் நாங்கள் கட்­சியை நடத்­த­வில்லை. மறைந்த தலை­வ­ருக்கும் ஏரா­ள­மாக பழி­சு­மத்­தி­னார்கள். அப்­படி பழி­சு­மத்­தி­ய­வர்­களும் கட்‌­சிக்குள் இருந்­தார்கள்.

நான் உட்­பட, முக­வரி இல்­லா­த­வர்­களை எல்லாம் தலை­வர்­க­ளாக ஆக்­கி­யது இந்த இயக்கம். சாதா­ரண மக்­க­ளி­லி­ருந்து பல தலை­வர்­களை உரு­வாக்­கிய தனிப்­பெரும் இயக்கம். திடீ­ரென கட்­சியை தூய்­மைப்­ப­டுத்­த­போ­கிறோம் என்று அபாண்­டங்­களை, அவ­தூ­று­க­ளையும் சொல்­லிக்­கொண்டு ஒரு கூட்டம் கிளம்­பி­யி­ருக்­கி­றது. இது வண்­டியின் பின்னால் சென்ற பிரா­ணியின் கதைக்கு ஒப்­பா­னது.

கட்­சிக்குள் இருந்­து­கொண்டு இவ்­வா­றான வேலை­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் இன்னும் இன்னும் கூட்டம் வைத்துப் பாருங்கள். கூட்டம் வைக்க, வைக்க அனு­ப­விப்­பார்கள். இவர்கள் மிக தைரி­ய­மாக, தாரா­ள­மாக கூட்­டங்­களை வைக்­கு­மாறு நான் கூறு­கிறேன்.

ஹஸன் அலி வேத­னை­யுடன் இருக்­கிறார். அவர் கூட்டம் நடத்­து­வதை நாங்கள் ஆமோ­திக்­கிறோம். நானும் ஏற்­றுக்­கொள்­கிறேன். ஹஸன் அலி அவ­ரு­டைய பிரச்­சி­னையை என்­னு­டனும் கதைத்­தி­ருக்­கிறார்.

கட்­சி­யி­டமும் கதைத்­தி­ருக்­கிறார். ஆனால், அவரை பக­டைக்­கா­யாக வைத்து, ஊர் ஊராக பிர­சாரம் செய்­யப்­போ­வ­தாக சிலர் சித்து விளை­யாட்டு காட்­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது.

கட்­டாய உச்­ச­பீடக் கூட்­டத்தில் என்னை தலை­வ­ராக பிரே­ரித்­தவர் ஹஸன் அலி. அவ­ரு­டைய கூட்­டத்தில் வைத்தும் அதை மீண்டும் ஆமோ­தித்­து­விட்டு சென்­றி­ருக்­கிறார். அப்­ப­டி­யான ஒரு­வரை நான் இழி­வு­ப­டுத்த முடி­யாது. அது மனிதப் பண்பு அல்ல.

ஒரு தனி­ம­னி­த­னு­டைய வேத­னையை இன்று கொஞ்­சப்பேர் பயன்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அவர்கள் ஒரு­கா­லத்தில் எதிர்த்­த­போது பாது­காத்­தவன் நான். இன்னும் பாது­காப்­பவன் நான். எதிர்­கா­லத்­திலும் பாது­காப்­பவன் நானா­கத்தான் இருப்பேன். கட்­சிக்கு பாதிப்பு ஏற்­ப­டுத்­தாத வரை, கட்­சி­யி­லுள்­ள­வர்­க­ளுக்கு அநி­யாயம் நடந்தால் அவர்­க­ளுக்கு பாது­காப்பு கொடுப்­பது நான். 

தலை­மைத்­து­வத்தை இலக்­கு­வைத்து செய்­யப்­படும் இந்த வேலை­களில், முரண்­பா­டுகள் இருந்தால் நேரில் பேசுங்கள். முரண்­பா­டு­க­ளாக சொல்­லப்­ப­டு­பவை எல்லாம் பொது­வான விட­யங்­க­ளாக இருந்­தன. ஒரு சில தனி­ந­பர்­களின் விவ­கா­ரங்­களை நான் கண்­டு­கொள்­வ­தில்லை என்றும் சொன்­னார்கள். இவை­யெல்லாம் இந்த செயார்மன் சங்­கத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சினை.

இந்தப் பின்­ன­ணியில் இயக்­கத்­துக்கு பாரி­ய­தொரு பாதிப்பை ஏற்­ப­டுத்த முடியும் என்ற அசட்டுத் தைரி­யத்­துடன் இவர்கள் செயற்­பட்டு வரு­கி­றார்கள். கூட்டம் போடு­ப­வர்கள் தைரி­ய­மாக கூட்டம் போடுங்கள். இதை நான் சாது­வா­கத்தான் சொல்­கி­றேனே தவிர, சவா­லாக சொல்‌­ல­வில்லை. அப்­போ­துதான் அதன் பார­தூரம் என்­ன­வென்­பதை அவர்கள் புரிந்­து­கொள்­வார்கள்.

கட்சித் தலைமை வன்­மு­றையை பிர­யோ­கிக்­க­மாட்­டாது. நான் வன்­மு­றை­களை எதிர்­கொண்‌­டி­ருக்­கிறேன். சவால்­க­ளுக்கு மத்­தி­யிலும் பலரும் கோட்­டை­யாக நினைத்­திந்த இடங்­க­ளுக்கும் நான் சாதா­ர­ண­மாக சென்­றி­ருக்­கிறேன். நிந்­தவூர் கூட்­டத்­துக்கு செல்­ல­வேண்­டா­மென என்­னிடம்‌ கெஞ்­சி­னார்கள்.

ஆனால், நான் வரு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்த கூட்­டத்­துக்கு மாறு­செய்­யாமல் இங்கு வந்­தி­ருக்­கிறேன்.
மற்­ற­வர்கள் சவால்­களை ஏற்­ப­டுத்­து­கி­றார்கள் என்­ப­தற்­காக அதற்­காக ஓடி ஒளியும் ஒரு­வ­ராக கட்சித் தலைமை ஒரு­போதும் இருக்க மாட்­டாது. சவால்­களை எதிர்­கொள்ளும் திராணி தலை­மைக்கு அவ­சியம். மக்­க­ளுக்கு மத்­தியில் வெளிப்­ப­டை­யாக பேசு­வ­துதான் எங்­க­ளுக்கு மத்­தி­யி­லுள்ள கடமை.

கரை­யோர மாவட்­டத்தை மறந்­து­விட்டோம் என்று மிகப்­பெ­ரி­ய­தொரு அபாண்­டத்தை சொல்லி­வ­ரு­கி­றார்கள். முள்ளை முள்­ளால்தான் எடுக்­க­வேண்டும். நேர்­மை­யான அர­சியல் செய்­து­கொண்­டி­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் முஸ்லிம் காங்­கிரஸ் நெருக்­க­மா­ன­தொரு சினே­கத்தை பேணிக்­கொண்­டி­ருக்­கி­றது. இந்­நி­லையில், அதனை லாவ­க­மாக பெற்­றெ­டுப்­ப­தற்­காக வியூ­கங்­களை வகுத்­துக்­கொண்­டி­ருந்தோம்.  

அறிக்கை மன்­னர்­க­ளாக இருந்­து­கொண்டு நாங்கள் எதையும் சாதிக்­க­வில்லை. நிந்­த­வூ­ரி­லுள்ள கிரான்­கோ­மாரி காணிப்­பி­ரச்­சி­னைக்கு அறிக்கை விட்டு ஒரு ஏக்கர் காணியை யாரா­வது மீட்­க­மு­டி­யுமா? ஆனால், எவ்‌­வித அறிக்­கை­க­ளையும் விடாமல் கிரான்­கோ­மாரி பிரச்­சி­னைக்கு இந்த தலைமை நிச்­ச­ய­மாக முடி­வினை பெற்­றுத்­தரும். 

ஒரு தேசி­யப்­பட்­டியல் ஆசனம் என்­பது ஒருத்­த­ரையும் கடை­சி­வரை கட்­சியில் இருக்­க­வி­டாது. முஸ்லிம் காங்­கிரஸ் மூலம் தேசி­யப்­பட்­டியல் வழங்கி 13 பேரை நாங்கள் அலங்­க­ரித்தோம். ஆனால், இப்­போதும் அஸ்­லமை தவிர, மற்ற எல்­லோரும் தேசி­யப்­பட்­டி­யலை அனு­ப­வித்­துவிட்டு கிட்­டத்­தட்ட போய்­விட்­டார்கள். தேசி­யப்­பட்­டியல் வழங்கி இரண்டு, மூன்று மாதங்கள் செல்­வ­தற்கு இடையில் அது பிரச்­சி­னை­யில்தான் போய் முடி­கி­றது.

நான் கஃபத்­துல்­லா­வுக்கு சென்று அல்­லாஹ்­விடம் துஆ கேட்டால், ஒன்றை மட்­டும்தான் கேட்பேன். இந்த தேசி­யப்­பட்­டி­யலை மட்டும் இல்­லாமல் செய்­து­விடு என்­றுதான் கேட்பேன். அப்­போ­துதான் இந்தக் கட்­சியை காப்­பாற்­ற­மு­டியும்.

ஆனால், சகோ­தரர் ஹஸன் அலிக்கு தேசி­யப்­பட்­டியல் வழங்கி அலங்­க­ரிப்­பதன் எனக்கு எந்­த­வொரு பிரச்­சி­னையும் கிடை­யாது. ஆனால், இந்த விவ­கா­ரத்தில் தலைவர் ஏன் தயக்கம் காட்­டினார் என்­பதில் அவர் தெளி­வு­பெற வேண்டும். தலைவர் கொடுத்த வாக்­கு­று­தியின் பெறு­மானம், என்னை சொல்ல வைத்­தாலும் அதை செய்வேன். 

பால­மு­னையில் நடை­பெற்ற கூட்­டத்தில் அட்­டா­ளைச்­சே­னைக்கு தேசி­யப்­பட்­டியல் வழங்­கு­வதை உறு­திப்­ப­டுத்­து­மாறு கூறு­கிறார். அட்­டா­ளைச்­சே­னைக்கு நான் கொடுப்­ப­தாக கூறிய தேசி­யப்­பட்­டியல் கட்­டாயம் கிடைக்கும். ஆனால், அவர்தான் கூறு­கிறார் ஹஸன் அலிக்கு தேசி­யப்­பட்­டியல் கொடுக்க கூடாது என்று. இப்­போ­துதான் விளங்­கு­கி­றது அதன் தாற்­ப­ரியம்.

கறுப்பு ஆடு­களை நான் கண்­டு­கொள்­ள­வில்லை என்று யாரும் நினைக்­க­வேண்டாம். அந்தக் கறுப்பு ஆடுகள் எங்கு மேய்­கி­றது என்று எனக்குத் தெரியும். இப்­ப­டி­யான கூட்­டத்­தி­னரை நான் நெடுங்­க­யிற்றில் விட்­டி­ருக்­கிறேன்.

ஆனாலும், நான் நிதா­னத்­துடன் இருக்­கிறேன்.
உங்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை தாரா­ள­மாக வந்து கதைக்‌­கலாம். அவற்­றுக்­கான தீர்­வு­களை நாங்கள் கூட்­டாக எடுப்போம். ஏரா­ள­மான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­கான ஒரு சிறந்த கட்­டத்­திலே, நாங்கள் எங்­களை சீர­ழிக்­கின்ற வேலையை செய்­யாமல், இயக்­கத்தை பாது­காக்கும் நோக்கில் செயற்­ப­ட­வேண்டும்.

அணிகள் உரு­வா­கு­வது என்­பது கட்­சிக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. ஆனால், அவற்­றையும் மீறி பலர் அணி­களை அமைத்­தி­ருக்­கி­றார்கள். அவர்கள் எந்த அணியைச் சேர்ந்­த­வர்கள் என்­பது எல்­லோ­ருக்கும் தெரியும். கட்சிப் போரா­ளி­க­ளுக்கு நன்­றாகத் தெரியும்.

அதனை தலைமை சொல்­ல­வேண்­டிய தேவையும் இல்லை. ஆனால், முகஸ்­து­திக்­காக வெளியில் அதனை சொல்­லாமல் இருக்­கிறோம். 

எல்­லோ­ருக்கும் எல்லாம் எப்­போதும் கிடைக்­காது. ஆனால், சில­ருக்கு எப்­போ­தா­வது ஏதா­வது கிடைக்கும். அதைத் தடுப்­பது அர­சியல் தார்­மீ­க­மல்ல. கட்­சி­யி­லி­ருந்த பலர் உள்­ளூ­ராட்சி சபை­யி­லி­ருந்து பாரா­ளு­மன்றம் வரை படிப்­ப­டி­யாக முன்­னே­றி­யி­ருக்­கி­றார்கள். அது அவர்­க­ளு­டைய வளர்ச்­சியைக் காட்­டு­கி­றது. 

அதே­வேளை, இன்னும் தகு­தி­யுள்­ள­வர்கள், பெறு­மா­ன­முள்­ள­வர்கள், கட்­சிக்‌­காக பாடு­பட்­ட­வர்கள் என எத்­த­னையோர் பேர் விரக்­தி­யோடு ஒதுங்­கி­யி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு ஏதா­வது, எப்­போ­தா­வது கிடைத்தால் நாங்கள் அதை மனப்­பூர்­வ­மாக அங்­கீ­க­ரிக்கும் விசா­ல­மான மனசு எங்­க­ளுக்கு வர­வேண்டும்.

பலர் பொறு­மை­யி­ழந்து என்­னுடன் சண்டை பிடிப்பார்கள். நான் இயன்றவரை அவர்களை சமாதானப்படுத்துவதுண்டு. சிலவேளைகளில், கொஞ்சம் கடிந்துகொள்‌வதும் உண்டு. ஆனால், மறுநாள் நான் மன்னிப்புக்கேட்ட சில சம்பவங்களும் உள்‌ளன.

இவ்வாறு நான் கட்சியிலுள்ளவர்களை அரவணைத்துக்கொண்டே செல்கிறேன்.ஏதோ கொஞ்சம் நோவித்திருக்கிறார்கள். ஆனால், இவ்விடயங்களை கண்டுகொள்‌ளாமல் இருக்க முடியாது. செவிடனாகவும் குருடனாகவும் சிலவேளை இருந்தாக வேண்டிய தலைமை, நிரந்தரமாக அப்படியே இருக்கமாட்டாது என்பதை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்.

இது தலைவர்களால் பாதுகாக்கப்பட்ட இயக்கமல்ல, மாறாக மக்களாலும் போராளிகளாலும் பாதுகாக்கப்பட்ட இயக்கம். அது தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வில் சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர், உயர்பீட உறுப்பினர்களான பளீல் பி.ஏ, ஏ.சி. யஹியாகான் மற்றும் நிந்தவூர் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பொறுப்பாளர் உள்ளிட்ட ஊர் மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Comments