உலமா சபையின் நிலைப்­பாடு தீங்­கி­ழைப்­ப­தா­க­வுள்­ளது


பெண்கள் செயற்­பாட்டு வலை­ய­மைப்பு 
சமீ­பத்­திய நேர்­காணல் ஒன்றில், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின்  தலைவர் ரிஸ்வி முப்தி, ‘முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­ட­மா­னது, அதன் தற்­போ­தைய நிலையில் சிறப்­பா­கவே எழு­தப்­பட்­டுள்­ளது, அதில் மாற்­றங்கள் தேவை­யில்லை.’ எனத் தெரி­வித்­துள்­ள­மை­யா­னது விச­ன­மேற்­ப­டுத்­து­வ­தா­கவும், ஏமாற்­ற­ம­ளிப்­ப­தா­கவும் உள்­ள­தாக பெண்கள்  செயற்­பாட்டு வலை­ய­மைப்பு  (வடக்கு கிழக்கிற் செயற்­படும் 8 பெண்கள் அமைப்­பு­க­ளது கூட்­ட­மைப்பு) வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,  
மதத் தலை­வர்கள் சம்­பி­ர­தா­யங்­களை முன்­னி­றுத்தி அடிப்­படை உரி­மை­களைத் தடுக்க முயலும் இந்­நி­லையில், முஸ்லிம் பெண்­களும், குழந்­தை­களும், தமது உரிமை தொடர்பில் இலங்­கையில் இரண்டாந் தரக் குடி­மக்கள் இல்லை என்­பதை அரசு உறு­திப்­ப­டுத்த வேண்டும் எனப் பெண்கள்  செயற்­பாட்டு வலை­ய­மைப்பு வேண்­டுகோள் விடுக்­கின்­றது.

நீதி­பதி சலீம் மர்­சூபின் தலை­மையில் முஸ்லிம் தனியார் சட்­டத்­தினைச் சீர்­தி­ருத்­து­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டில் அப்­போ­தைய நீதி­ய­மைச்­சரால் அமைக்­கப்­பட்ட குழுவில், ரிஸ்வி முப்­தியும், உலமா சபையின் இன்­னொரு மூத்த உறுப்­பி­னரும் அங்­கத்­த­வர்­க­ளாவர். உலமா சபை­யா­னது, இக் குழுவின் அங்­கத்­த­வ­ரென்ற வகையில், கடந்த எட்டு வரு­டங்­க­ளாக, முஸ்லிம் தனியார் சட்­டத்­தினுள் சீர்­தி­ருத்­தங்­களைக் கொண்­டு­வ­ரு­வது தொடர்­பாக நிகழ்ந்த கலந்­து­ரை­யா­டல்­களிற் பங்­கேற்­றுள்­ளது. 

முப்­தியின் இக் கூற்­று­க­ளா­னது, முஸ்லிம் தனியார் சட்­டத்­தினுள் நிலை­யான சட்டச் சீர்­தி­ருத்­தங்கள் ஏற்­ப­டுத்­து­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்டு வரு­கி­றது என்ற தவ­றான நம்­பிக்­கையை நோக்கி, குழு­வையும், தாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தாகக் கூறும் முஸ்லிம் சமூ­கத்­தையும் உலமா சபை வழி­ந­டத்­தி­யி­ருக்­க­லா­மென்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. 

ரிஸ்வி முப்­தியின் இக் கூற்­றுகள், இது தொடர்பில் குழு மேற்­கொண்ட முயற்­சி­க­ளுக்குத் தீங்­கி­ழைப்­ப­தா­க­வுள்­ளது. மேலும் இது முஸ்லிம் தனியார் சட்­டத்தின் கார­ண­மாகக் கடந்த காலத்­திலும், தற்­போதும் தொடர்ந்து அநீ­திக்­குட்­ப­டுத்­தப்­பட்­டு­வரும் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறு­மி­ய­ருக்கும் பாரிய தீங்­கி­ழைப்­ப­தா­க­வுள்­ளது. 

முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் அதன் செயற்­ப­டுத்­து­கையே, குழந்தைத் திரு­ம­ணத்தை அனு­ம­தித்தல், வயது வந்த பெண்­களைப் பரா­ய­ம­டை­யா­த­வர்கள் போல் நடத்­து­வதன் மூலம் அவர்­க­ளது சுயாட்­சியை அகற்­றுதல், காதிமார் சபை (குவாஸி) நீதி­பதி போன்ற அரச ஊதியம் கிடைக்கும் பத­வி­க­ளுக்குப் பெண்கள் பணி­ய­மர்த்­தப்­ப­டு­வதைக் கட்­டுப்­ப­டுத்­துதல், ஆண்­க­ளுக்கும் பெண்­க­ளுக்கும் சம­னற்ற விவா­க­ரத்து ஏற்­பா­டு­களை வரை­ய­றுத்தல், நிபந்­த­னை­யற்ற பல­தார மணத்தை அனு­ம­தித்தல் போன்ற சம­வு­ரி­மையை நிரா­க­ரிக்கும் பல்­வேறு நீதிக்குப் புறம்­பான செயல்­க­ளுக்கு முஸ்லிம் பெண்­க­ளையும், சிறு­மி­க­ளையும் உட்­ப­டுத்­து­கி­றது என பெண்கள் செயற்­பாட்டு வலை­ய­மைப்பு உறு­தி­யாக நம்­பு­கி­றது. உலமா சபை கூறு­வது போல் பிரச்­சினை வெறு­மனே சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் மட்­டு­மில்லை, மாறாகப் பிரச்­சினை சட்­டத்­தி­லேயே இருக்­கின்­றது. 

இது தொடர்­பான எங்­க­ளது அக்­க­றை­களைப் பகிர்ந்­து­கொள்­வ­தற்­காக, எமது வலை­ய­மைப்­பி­லுள்ள முஸ்லிம் பெண்கள் அமைப்­புகள் மற்றும் குழந்தைத் திரு­ம­ணத்தின் பிடி­யி­லி­ருந்து தப்­பி­ய­வர்­களை உள்­ள­டக்­கிய பாதிக்­கப்­பட பெண்­க­ளுடன் எமது அமைப்பு பல தட­வைகள்  உலமா சபை­யினைச் சந்­தித்­துள்­ளது.

இவ் ஒவ்­வொரு சந்­திப்­பின்­போதும் உலமா சபை உறுப்­பி­னர்கள் தமது அக்­க­றை­களைப் பகிர்ந்­து­கொண்­ட­தோடு, தனியார் சட்­டத்­தினைச் சீர்­தி­ருத்­து­வதில் தாம் எவ்­வ­ளவு அர்ப்­ப­ணிப்­பா­யுள்ளோம் என்­ப­தையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். 

இச் சமீ­பத்­திய கூற்று, அவர்கள் முன்பு கூறி­ய­தற்கு எதி­ரா­கவும், தனியார் சட்ட சீர்­தி­ருத்­தங்­க­ளுக்கு உலமா சபையின் அர்ப்­ப­ணிப்பு உண்­மை­யா­னதா என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­ற­தா­கவும் இருக்­கின்­றது. பாதிக்­கப்­பட்ட பெண்­களின் பார்­வைகள் எத­னையும் பிர­தி­ப­லிக்­காத முப்­தியின் கருத்­து­களால் நாம் மிகுந்த மன­வ­ருத்­த­ம­டைந்­துள்ளோம்.

இச் சமீ­பத்­திய கூற்று மற்றும் சீர்­தி­ருத்தம் தொடர்பில் உலமா சபையின் செய­லற்ற தன்மை என்­பன, இனம் மற்றும் மதச் சித்­தாந்த அடிப்­ப­டையிற் பன்­மு­கப்­பட்ட முஸ்லிம் சமூ­கத்தை தாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தாக உலமா சபை கூற முடி­யாது என்­பதைத் தெளி­வாகச் சுட்டிக் காட்­டு­கி­றது. 

சட்டத் சீர்­தி­ருத்தம் மீதான உலமா சபையின் நெகிழ்ச்­சி­யற்ற, தீவிரப் போக்­கா­னது, அவர்­க­ளது கண்­ணோட்­டங்­களின் பிற்­போக்­குத்­தன்­மை­யையே காட்­டு­கின்­றது. தமது சமூ­கத்தின் நம்­பிக்­கையை வெல்ல இய­லா­த­வர்கள் சாத­க­மான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வதை நோக்­க­மாகக் கொண்ட ஒரு குழுவின் அங்­கத்­து­வத்­தி­லி­ருந்து தகு­தி­நீக்­கப்­பட வேண்டும் என்­பதை எமது அமைப்பு உறு­தி­யாக நம்­பு­கி­றது.  

முஸ்லிம் தனியார் சட்ட சீர்­தி­ருத்­தத்­தினை ஆத­ரிப்­ப­வர்கள் மீதான தாக்­கு­தல்­களை, குறிப்­பாக தனியார் சட்டம் மற்றும் காதிமார் சபை (குவாஸி) அமைப்­பினால் தமது அடிப்­படை உரி­மைகள் மறுக்­கப்­பட்­டோ­ருக்­காகப் போராடும் முஸ்லிம் பெண்கள் மீதான தாக்­கு­தல்­களை நியா­யப்­ப­டுத்த, சட்ட திருத்தம் மீதான உலமா சபை மற்றும் ஏனைய இஸ்­லா­மிய குழுக்­களின் நிலைப்­பா­டா­னது சமீப காலத்திற் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­பதை எமது அமைப்பு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றது. 

உலமா சபையின் நெகிழ்ச்­சி­யற்ற, தீவிரப் போக்­கா­னது, முஸ்லிம் இளை­ஞர்­களை அடிப்­ப­டை­வா­தத்தை நோக்கி இட்டுச் சென்­ற­துடன், அவர்கள் ' முஸ்லிம் தனியார் சட்­ட­மா­னது ஷரியாச் சட்­டத்­தினைப் பிர­தி­ப­லிக்­கின்­றது. ஆதலால் அதன் மீது சீர்­தி­ருத்­தங்­களை ஏப­டுத்த இய­லாது / கூடாது’ என நம்­பவும் வழி­கோல்­கி­றது.

உலமா சபையின் சமீ­பத்­திய கூற்­றுக்­க­ளா­னது, அவை முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்­தை­களின் நலன்­களைக் கருத்திற் கொள்­வ­தற்கு மாறாக, இலங்­கையில் முஸ்லிம் பெண்­களின் சம உரிமை மற்றும் நீதிக்­கான அணு­கு­முறை என்­ப­வற்­றுக்குத் தடை­யா­க­வுள்­ளன என்­ப­தையே காட்­டு­கி­றது. 

இந்­நி­லையைக் கருத்திற் கொண்டு, அரசு இதிற் தலை­யிட்டு, 18 வயதை எல்லாக் குடி­மக்­க­ளுக்­கு­மான திரு­ம­ணத்­திற்­கான குறைந்­த­பட்ச வய­தாக அறி­வித்தல், அரச ஊதியம் கிடைக்கும் பதவிகள் பெண்களுக்குக் கிடைக்கும் நிலையினை உறுதிப்படுத்தல் போன்ற பல்வேறு அடிப்படையான சமரசத்திற்கு அப்பாற்பட்ட விடயங்கள் தொடர்பில் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என எமது அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது. 

உறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கு அதிக எதிர்பார்ப்புள்ள நிலையில், அரசானது முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட்ட தனது அத்தனை குடிமக்களுக்கும் தனது பொறுப்பினை ஆற்றவேண்டும். அரசானது ஒரு அரசைப் போற் செயற்பட்டு, மதத்தின் பெயரால் அநீதியை அனுமதிக்க விளைபவர்களிடமிருந்து, முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட்ட எல்லா இலங்கையரது உரிமைகளையும் பாதுகாப்பதற்கு இதுவே சிறந்த தருணமாகும் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments