கிண்ணியாவின் டெங்கு நிலவரம் – நேரடி ரிப்போர்ட்
(Mohamed Hisaam)
கிண்ணியா பிரதேசத்தில் இது வரைக்கும் 2400 பேர் வரை டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
மற்றைய இரண்டு பகுதியினர் வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு பரவி இருப்பது டெங்குதான் என அரச வைத்தியசாலை வட்டம் உறுதிப்படுத்தியுள்ளது. . டெங்கு என்பது நான்கு வகைகளை கொண்டுள்ளது .T 1/T2 /T3 /T4 இலங்கையில் வழமையாக type 1 , 4 ம்தான் மக்களை வந்து தாக்கியுள்ளது .
ஆனால் தற்போது கிண்ணியாவில் மக்கள் மத்தியில் பரவியுள்ளது type 2 வாகும் .hemorrhage என்கிற காய்ச்சலாகும்.
இது உடலில் உள்ள உள் உறுப்புக்களை தாக்கும் வல்லமையுள்ளது. கிட்னி, இதயம், மூளை போன்றவைகளை பாதிப்படைய செய்கிறது .
இதுவரை 14 மரணங்கள் சம்பவித்துள்ளன .
இதற்கான காரணம் வழமைக்கு மாற்றமான நோய்த்தாக்கமாகும்.
சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள கிண்ணியா பிரதேசத்தில் மக்கள் சனத்தொகைக்கு ஏற்ப போதியளவு வசதிகளைகாகொண்ட வைத்தியசாலை இன்மையும், 38 வைத்தியர்கள் காணப்படவேண்டிய வைத்தியசாலையில் 17 வைத்தியர்கள் சேவையில் இருப்பதும், 62 தாதியர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 34 பேர்கள் மாத்திரமே சேவையில் உள்ளதும் பாரிய குறைபாடாகும்.
அத்தோடு சுனாமிக்கு பின்னர் தற்காலிமாக அமைக்கப்பட்ட வைத்தியசாலையும் போதியவசதிகளுடன் காணப்படாதமையும் பிரதான காரணமாகும்.
எங்களுடைய இன்றைய கள பயணத்தில் இந்த பிரதேச மக்கள் எதிர் நோக்கும் சவால்கள் மற்றும் இந்த மக்களுக்கு தேவையான அவசர உதவிகள் தொடர்பாகவும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் உப தலைவருடனும் ஏனைய சில முக்கிய நபர்களுடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
(சமுக ஆர்வலர்கள் கிண்ணியாவின் முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டு மேலதிக உதவிகளை வழங்க முடியும்)

Comments
Post a Comment