கந்தளாயில் வேளாண்மை அறுவடை மும்முரம்


திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திடல் காணிகளில் செய்கை பண்ணப்பட்ட எட்டாயிரத்து ஐந்நூறு ஏக்கர் காணிகளில் வேளாண்மை செய்கையின் அறுவடைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாக கந்தளாய் பிரதேச விவசாய சங்கத் தலைவர் ஏ.எம்.சம்சூடீன் தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேசத்தின் வட்டுக்கச்சி, பேராறு,வான்எல,ஜயந்திபுர மற்றும் ரஜஎல போன்ற பகுதிகளில் திடல் காணிகளில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை அறுவடைகளே நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

கந்தளாய் பிரதேசத்தில் பதினைந்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஆராயிரத்து ஐந்நூறு ஏக்கர் வேளாண்மை அழிவடைந்துள்ளதாகவும் கந்தளாய் பிரதேச விவசாய சங்கத் தலைவர் ஏ.எம்.சம்சூடின் தெரிவித்தார்.

தற்போது விளைச்சல் எதிர்பார்த்தளவு இல்லையெனவும், நெல்லின் விளையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயத் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

Comments