மீண்டும் மாற்றத்துக்குள்ளாகும் பேக்கரிப்பொருட்களின் விலைகள்!
வருகின்ற சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் தமது உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பதன் காரணமாக தமது உற்பத்தி பொருட்களின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment