கிழக்கு மாகாண மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.. நாபீர் பெளண்டேசன்..

(ihzana fareed)

கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் இருக்கின்ற முக்கிய அரசியல்வாதிகள் இருவர் கிழக்கு மகாண மக்களின் வாக்கு வங்கியினை வைத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களை பெற்று அனுபவித்து வருகின்ற இந்த சூழ் நிலையில் எதிரே வருக்கின்ற தேர்தலில் கிழக்கு மாகாண மக்கள் அவதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய கட்டாய சூழ் நிலையில் இருக்கின்றார்கள் என நாபீர் பெளண்டேசசின் இஸ்தாபக தலைவர் பொறியலாளர் அல்-ஹாஜ் நாபீர் தெரிவிக்கின்றார்.

மேலும் தனது கருத்தினை குறித்த விடயம சம்பந்தமாக தெரிவித்த அல்-ஹாஜ் நாபீர்.. இரண்டு அமைச்சர்களும் வாக்களித்துள்ள கிழக்கு மாகாண மக்களுக்காக எவ்வகையான அபிவிருத்திகளை செய்துள்ளார்கள்? அல்லது பல்கலை கழகளில் பட்டங்களை பூர்த்தி செய்துள்ள இளைஞர்களுக்காக அவர்களால் வழங்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புக்களின் எண்ணிக்கை என்ன? என்ற கேள்வியினை நாபீர் பெளண்டேசன் இரண்டு அமைச்சர்களையும் பார்த்து கேட்க விரும்புகின்றது.

ஆனால் தேர்தல் வருகின்ற பொழுது கிழக்கு மாகாணத்தில் அளிக்கப்படுகின்ற மொத்த வாக்குகளை வைத்துக்கொண்டே இவர்கள் அமைசுப்பதவிகளையும் தேசியப்பட்டியல் ஆசனங்களையும் பெற்று சுக போக வாழ்க்கை வாழ்கின்றார்கள். நாபீர் பெளண்டேசன் கேட்பதெல்லாம்  தங்களுக்கு மாகாண சபையிலோ அல்லது பிரதேச சபைகளிலோ அதிகாரங்கள் தரப்படுமானால் 2020 ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் 2000 வேலை வாய்ப்புக்களை வழங்குவோம் என சவாலாக கூறுகின்றது.

நாபீர் பெளண்டேசனாது அதிகாரம் தரப்பட்டாலும் அதிகாரம் இல்லா விட்டாலும் சரி 2000 வேலை வாய்ப்புக்களை வழங்குவது என்ற நிலைப்பட்டிலே தன்னுடைய சமூக சேவையினை முன்னெடுத்து வருகின்றது. ஆனால் வேறொருவருக்கு அதிகாரத்தினை வழங்கிவிட்டு நாபீர் பெளண்டேசன் 2000 வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும் பிழையான விடயமாகும். ஆகவேதான் நாபீர் பெண்டேசனானது மக்களால் வழங்கப்படுகின்ற அரசியல் அதிகாரத்தினை சமூக சேவை செய்வதற்காகவும், எமது மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றி கொள்வதற்காவுமே எதிர்பார்க்கின்றது.
இதனால்தான் நாம் மக்களிடம்  மக்கள் வருகின்ற தேர்தல் காலங்களில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். எங்களுடைய நிறுவனமானது 2020ம் ஆண்டு இன்சா அல்லாஹ் 2000 வேலை வாய்ப்புக்களை வழங்க கூடிய படியினை அடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. ஆனால் அரசியல் அதிகாரத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் மக்களுக்காக எதனை செய்துள்ளார்கள் என்பதனை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதை நாபீர் பெளண்டேசன் வேண்டி நிற்கின்றது.

அந்த வகையிலே அமைச்சர் ஹக்கீமுடன் அமைச்சர் றிசாட்டினை ஒப்பிடுகின்ற பொழுது 33000 வாக்குகளை அம்பாறை மாவட்டத்தில் பெற்றமைக்காக நான்கு முக்கிய பதவிகளையாவது அம்பாறை மாவட்ட மக்களுக்காக கொடுத்துள்ளார். ஆனால் முஸ்லிம் காங்கிரசின் தலைமையும் அமைச்சருமான ஹக்கீம் எதனை செய்துள்ளர் என்பதனை மக்கள் நன்கறிந்தவர்களாகவும் எதிர்காலத்தில் சிந்தித்து வாக்களிக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையினை அவர்களை சார்ந்தவர்களே இன்று கட்சிக்குள் இருந்து கொண்டும் வெளியில் இருந்து கொண்டும் விமர்சிக்கும் அளவிற்கு வந்துள்ளார்கள். எனவே மக்கள் ஒரு தெளிவான நிலைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இவர்கள் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு எதிராக முன்வைக்கின்ற பிரச்சனைகளை அன்று நாங்கள் தெளிவுபடுத்தினோம். ஆனால் இன்று இவர்கள் கூறுகின்றார்கள்.

ஆகவே எதிரே வருகின்ற தேர்தல்களின் இவ்வாறானவர்களின் வியாபார அரசியல் அம்பாறை மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் எடுபட போவதில்லை என்பது ஒரு புறமிருக்க அவ்வாறு வியபார அரசியலினை மேற்கொண்டு மேலும் எமது மக்களை ஏமாற்ற நினைப்பவர்களுக்கு எதிராக நாபீர் பெளண்டேசன் நேரடியாக அரசியல் களத்தில் குதித்து மக்களுக்காக போராடும் என்பதனை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புக்கின்றது. அதற்கு மக்களினுடைய பூரண ஒத்துளைப்பினையும், மக்கள் ஏமாற்றபடுகின்ற 
அரசியல் கலாச்சாரத்திலிருந்து தெளிவுபெற்று யாருக்காக? எதற்காக? 

வாக்களிக்க வேண்டும் என்ற முடிவிற்கு வர வேண்டிய காட்டய தேவையிருப்பதனை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றது என தெரிவித்தார் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் நாபீர்.

Comments