ஹசன் அலியின் கூட்டத்திற்கு பொத்துவில் மக்கள் அணி திரண்டு வரவேண்டும் – நாபீர்

(ihzana fareed)

பொத்துவில் மக்கள் இதுவரை காலமும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கும் வாக்களித்து ஏமாற்றப்பட்டு வருகின்ற வரலாற்றினை மீட்டி பார்க்கின்ற அதே நேரத்தில் அதற்கான எழுச்சியினை மக்கள் மயப்படுத்தும் தருனம் இன்றைய 10.03.2017 வெள்ளிக்கிழமை பொத்துவில் ஹசன் அலியினால் ரவூப் ஹக்கிமிற்கு எதிராக இடம் பெறுக்கின்ற கூட்டம் மிக முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

ஆகவே இன்று இடம் பெறுகின்ற கூட்டத்திற்கு அரசியல் பாகுபடுகளுக்கு அப்பால் மக்கள் அணி திரண் வருமாறு பகிரங்க அழைப்பு விடுப்பதாக நாபீர் பெளண்டேசன் தெரிவிக்கின்றது.

அந்த வகையிலே இன்று பொத்துவிலில் இடம் பெறும் ஹசன் அலியின் கூட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக திரண்டு வருகின்ற பொத்துவில் மக்கள் வெள்ளம்தான் அவர்கள் இது வரை காலலும் சந்தித்த அநீதிக்கு எதிரான விடையாக பார்க்கப்படுகின்றது.

மேலும் அதே நேரத்தில் குறித்த பொதுக்கூட்டமானது வரலாற்றில் பொத்துவிலுக்கான அரசியல் விமோசனமாக அமையும் என்பது யதார்த்தமாக இருக்கும் அதே இடத்தில் பொத்துவில் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யும் பொருட்டு வருகின்ற பிரதேச சபை தேர்தலில் பொத்துவில் பிரதேச சபையில் தனித்து போட்டி இட தாங்கள் தீர்மானித்துள்ளதாக நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் பொறியியலாளர் அல்-ஹாஜ் நாபீர் தெரிவிக்கின்றார்.

Comments