இன்னும் ஒரு சிறுமியின் உயிரை பறித்த டெங்கு
புதிய காத்தான்குடி நூறாணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக காத்தான்குடி நூறாணியா வித்தியாலய மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 4 இல் கல்வி பயிலும் பாத்திமா கதீஜா எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Comments
Post a Comment