கவிஞர் பாடலாசிரியர் பாடகர் என பல திறமைகளை கொண்ட வளர்ந்து வரும் இளம் கவிஞர் சிறாஜ் நகர் சல்மான் (கவி)



(mahroof nifras)
வளர்ந்து வரும் இளம் கவிஞர் தம்பலகாமம் சிறாஜ் நகரைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவராகிய சல்மான் கவி தனக்கென்றே பல கலைத் திறமைகளை கொண்டிருக்கும்
 இவர் கலை மீது கொண்ட ஆர்வத்தாலும் கலைப்பற்றாலும் இந்தியா மற்றும் உள்ளூர்களில் உருவாக்கப்படுகின்ற குறுந்திரைப்பட பாடல்களுக்கு வரிகள் எழுதியும் பாடியும்  தான் கலைத் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார்.

நிச்சயமாக பல பன்முகத் திறமை கொண்ட இவ்வாறன இளம் கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் சிறந்த களமும் ஊக்கமும் அளிக்கப்படுதல் வேண்டும்.

வெறுமனே வாழ்வின் போக்கில் நகர்ந்து செல்லும் எத்தனையோ இளையவர்களிடையில் தனக்கென ஒரு தனித்துவத்தை  நாடி அதைத் தேடி அடைந்த ஒரு வளரும் இவ் இளம் கவிஞரை அறிமுகப்படுத்துவதில் அரபா நகர் முகநூல் பக்கம்  பெருமை கொள்கிறது

Comments