மஹிந்தவுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் பேச்சு!


கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

நாளை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தையின்போது, எதிர்கால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அதற்கமைய குறித்த சந்திப்பு கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Comments