(வீடியோ).,ஓட்டமாவடி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழா சம்பந்தமாக நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு

(ihzana fareed)

மட்டக்களப்பு கல்குடா தொகுதி, ஓட்டமாவடியில் 1917ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு மாவட்டத்தில் மட்டுமல்லாது தேசியத்திற்கே எடுத்துக்காட்டும் விதத்தில் தனது நூற்றாண்டினை கொண்டாட இருக்கும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையானது இன்று 08.03.2017 புதன் கிழமை நூற்றாண்டு விழா சம்பந்தமாக ஊடகவியலாளர் சந்திப்பினை கல்லூரியின் மண்டபத்தில் நடாத்தியது.
குறித்த நூற்றாண்டு விழாவில் முக்கியமாக எட்டு அம்ச நிகழ்வாக இடம் பெறுகின்ற…. 

பாடசாலையின் பெளதீக வளங்களை 10 கோடி ரூபாய்கள் செலவில் அபிவிருத்தி செய்தல்.
பாடசாலையினை பசுமைப்படுத்துதல்.
பாடசாலைக்கு முக்கிய தேவையாக இருக்கிற பேருந்து பஸ் வண்டியினை கொள்வனவு செய்தல்.
இறுதி நாள் நிகழ்வில் பாடசாலைக்கான முத்திரை ஒன்றினை வெளியிடல்.
அதனோடு சேர்த்து பாடசாலை வரலாற்றினை சித்தரிக்கும் மலரினை வெளியிடல்.

பழைய மாணவர் மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டிகளை நடாத்துவது.
தேசிய ரீதியில் கட்டுரை, கவிதை போட்டிகளை நடாத்துதல்.
கண்காட்சியுடனான இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதீதியாக அதி மேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கலந்து சிறப்பித்தல்.

போன்ற முக்கிய எட்டு அம்ச நிகழ்வோடு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு தினமாக இருக்கின்ற எதிர்வரும் 19.03.2017ம் திகதி BAKT TO SCHOOL மீண்டும் பாடசாலைக்கு திரும்புதல் எனும் தலைப்பில் பாடசாலையில் அதிபர்களாக, ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களும், அவர்களிடம் கற்ற பழைய மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு திரும்பி கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், கடந்த கால நினைவுகளை மீட்கும் அரிய வரலாற்று நிகழ்வான நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இவ்வாறான நிகழ்ச்சிகள் சம்பந்தமான விடயங்களையும், நூற்றாண்டு விழா சமப்ந்தமகவும் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் பாடசாலையின், பிரதி அதிபர் ஏ.எல்.எம்.கபீர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவரும் கோறளைப்பற்ரு மத்தி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏம்.எம்.றியாஸ் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எம்.பி.எம்.சுபைர் ஆகியோர் முன்னிலையில் அதிபர் ஹலீம் இஷ்ஹாக் தெளிவுபடுத்தியதோடு,. ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளான..




குறித்த நூற்றாண்டு விழாவிற்கான நிதிகள் எவ்வாறு திரட்டப்பட்டுள்ளது?
நூற்றாண்டு விழா சம்பந்தமாக தனிப்பட்ட அரசியல் தலையீடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களின் உண்மை நிலை என்ன?
இவ்வாறான ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்துவதன் நோக்கம் என்ன?
பழைய மாணவர்களின் ஒத்துழைப்பானது நூற்றாண்டு விழாவிற்கு திருப்திகரமானதாக இருக்கின்றதா?

நூற்றாண்டு விழாவிற்கு பழைய மாணவர்களால் சேகரிக்கப்பட்ட நிதிகள் சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவது எதற்காக? அதில் ஏதும் உண்மை நிலை இருக்கின்றதா?


நூற்றாண்டு விழாவிற்கு மக்களுடைய பங்களிப்பு சம்பந்தமான விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?
போன்ற முக்கிய கேள்விகளுக்கு பாடசாலையின் அதிபர் ஹலீம் இஷ்ஹாக்கினால் வளங்கப்பட்ட பதில்களுடன் ஊடகவியலாளர் சந்திப்பில் நூற்றாண்டு விழா சம்பந்தமாக தெரிவிக்கப்பட்ட விடயங்களின் தெளிவான விளக்கங்கள் அடங்கிய முழு நேர காணொளியானது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.

Comments