தம்புள்ளையில் வர்த்தக நிலையங்கள் பூட்டு


பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கை கோருகிறது ஆணைக்குழு
தம்­புள்­ளையில் ஏற்­பட்ட முறுகலை தடுப்­ப­தற்கு தம்­புள்ளைப் பொலிஸார் நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்­பாக அறிக்கை ஒன்­றினை தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­விற்கு ஒரு­வார காலத்­துக்குள் அனுப்பிவைக்­கு­மாறு அதன் செய­லாளர் என். ஆரி­ய­தாஸ குரே, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவை வேண்­டி­யுள்ளார்.

 தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் பொலிஸ்மா அதி­ப­ருக்கு அனுப்பி வைத்­துள்ள NPC/PCID/HO/23/2017 ஆம் இலக்க 2017.03.03 ஆம் திக­தி­யிட்ட கடி­தத்­தி ­லேயே இவ்­வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, குறிப்­பிட்ட விவ­காரம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் 69 ஆவது கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இது தொடர்­பான முறைப்­பாட்டின் பிரதி உங்­க­ளது கவ­னத்­திற்­காக இத்­துடன் இணைக்­கப்­பட்­டுள்­ளது.

இது பற்றி ஆராய்ந்து தங்­க­ளது அறிக்­கையை இக் கடிதம் கிடைத்து ஒரு­வார காலத்தில் சமர்ப்­பிக்­கவும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

அண்­மையில் தம்­புள்­ளையில் முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான உண­வ­கத்தில் ஏற்­பட்ட தாக்­குதல் சம்­ப­வத்தை அடுத்து பெரும்­பான்மை இனத்­த­வர்கள் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களை மூடு­மாறு அச்­சு­றுத்­தி­யதை அடுத்து முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் அனைத்தும் தொட­ராக மூன்று நாட்கள் மூடப்­பட்­டன. 

இந்த வர்த்­தக நிலை­யங்கள் மூடப்­பட்­டதை தடுப்ப­தற்கு தம்­புள்ளை பொலிஸார் எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

 இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் கடந்த மாதம் 14 ஆம் திகதி தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­விற்கு முறைப்­பா­டொன்றைச் செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Comments