கழிவகற்றும் பணியில் முதியவர்களை ஈடுபடுத்தக் கூடாது: பைசர்


பொருளாதார பிரச்சினையில் சிக்கித் தவித்தாலும் கூட வயது மூத்தவர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கி உதவிகளை செய்ய வேண்டுமே தவிர அவர்களை கழிவகற்றும் பணிகளில் ஈடுபடுத்திக் கஷ்டப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார் அமைச்சர் பைசர் முஸ்தபா.

கழிவகற்றல் தொடர்பாக மாகாண – நகரசபை நிர்வாகங்களுடனான சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், குப்பை கொட்டும் விடயத்தில் பொது மக்களுக்கும் விழிப்புணர்வூட்டல் அவசியப்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments