டெங்கு ஒழிப்பு – உபகரணங்கள் கையளிப்பு

(ihzana fareed)

கிண்ணியாவில் தற்போது தீவிரமடைந்து வரும் டெங்கு நோயினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கிண்ணியா வைத்தியசாலையில் பாரிய இடநெருக்கடி நிலவுகிறது. இதனை கட்டுபடுத்தவும் வைத்திய வசதிகளை அதிகரிக்கவும் பல அமைப்புக்கள் களமிறங்கியுள்ளன.

இதன் ஒரு அங்கமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்த ஒரு தொகை நுளம்பு வலைகள் ,மெத்தைகள் மற்றும் நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுபடுத்தும் உபகரணங்களை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கையளித்தார்.

அன்று காலை பாராளுமன்ற உறுப்பினரின் தலைமையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டமை குறுப்பிடத்தக்கது.

Comments