மகிழ்ச்சியில் மஹிந்த!
தாம் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊவ வெல்லஸ்ஸ புரட்சியின் போது வெள்ளையர்களால் தேசத்துரோகிகளாக பெயரிடப்பட்ட 82 பேரும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பிலே மஹிந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
அதேபோன்று அவர்களிடம் இருந்து கைவிட்டுப் போன பரம்பரை சொத்துக்கள் மீளக் கையளிக்க வழி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.


Comments
Post a Comment