மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை வல்லுறவுக்குட்படுத்திய மூவர்!


திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனநலம் குன்றிய யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 23 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு திருகோணமலை பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சீனக்குடா, கொட்பே பகுதியைச் சேர்ந்த 23, 20 மற்றும் 26 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும் நேற்று மனநலம் குன்றிய குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்று யாருமில்லாத சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய மூவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments