மகிந்த மற்றும் கோத்தாவிற்கு தண்டணை கோரி இஸ்லாமிய தாய் சபதம்!
வவுனியாவில் இடம்பெற்று வரும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றிய தாய் ஒருவர் தனது காணாமல் ஆக்கப்பட்ட மகனைபற்றி கூறும்போது,
நான் கொழும்பில் இருந்து வந்திருக்கின்றேன். எனது மகனின் பெயர் முஹமது ஹக்கீம். கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி மகனை கொழும்பில் வைத்து கடத்தினார்கள். கொழும்பில் எல்லா இடங்களிலும் தேடியும் மகனை பற்றிய விபரம் எதுவுமே தெரியவில்லை.
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி 20 பஸ்களில் ஆட்களை அலரி மாளிகைக்கு கொண்டு வந்தார்கள் அதில் என்னுடைய மகன் போல் ஒருவர் இருந்தார்.
அனுராதபுரம், மதவாச்சி, வவுனியா, காத்தான்குடி, திருகோணமலை என அந்த பஸ்களில் இடத்தின் பெயர்கள் போடப்பட்டிருந்தது. நான் சென்று விசாரித்தபோது அந்த பஸ்கள் வவுனியாவுக்கு சென்று விட்டது என்று அங்கு நின்றவர்கள் சொன்னார்கள்.
அப்போது நான் எனது மகனின் படத்தை காட்டி இதற்குள் எனது மகன் இருந்தாரா என வினவியபோது யாரும் பதில் கூறவில்லை.
இந்த கடத்தல்கள் யாவும் முன்னைய ஆட்சி காலத்திலேயே நடைப்பெற்றுள்ளது.
இதற்கு முழு பொருப்பையும் கூற வேண்டியவர்கள் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவுமேயாகும்.
ஆகவே மகிந்தராஜபக்சவிற்கும், கோத்தபாய ராஜபக்சவிற்கும் கடவுள் கட்டாயம் தண்டனை கொடுப்பான். நான் என் வயிறு எரிஞ்சு சொல்கிறேன் என குறிப்பிட்டார்.
காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் இஸ்லாமிய தாய் ஒருவரே இவ்வாறு சபதமிட்டார்.


Comments
Post a Comment