பணம் பறிப்பு; பாடசாலை மாணவர்கள் மூவருக்கு விளக்கமறியல்


கனிஷ்ட பாடசாலை மாணவர்களிடம் பணப் பறிப்பில் ஈடுபட்ட உயர்தர பாடசாலை மாணவர்கள் மூவர் கண்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டு 9ம் தகிதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களிடம் 2500 ரூபா பணம் பறிக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பின்னணியில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சோதனையிடப்பட்டதாகவும் அதன் போது காலணிக்குள் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பேரதெனிய பல்கலையில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தையடுத்து கண்டி நகரில் பொலிசர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments