தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் சவுதி பயணம்: உம்ரா கடமையையும் நிறைவேற்றவுள்ளார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (09) சவூதி அரேபியா பயணமானார். அத்துடன் புனித உம்ரா கடமையையும் நிறைவேற்றவுள்ளார்.
சவூதி அரேபிய சுற்றுச்சூழல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல் பெட்லியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நீர் வழங்கல் தொடர்பில் இருதரப்பு ஒப்பந்தமொன்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கைச்சாத்திடவுள்ளார்.
அத்துடன் சவூதி அரேபியாவிலுள்ள பாரிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிடும் அமைச்சர், அங்குள்ள தொழில்நுட்பத்தை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பிலும்க லந்துரையாடவுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துக்கு நிதியுதவி வழங்கும் சவூதி அபிவிருத்தி நிதியத்துடன் முக்கிய பேச்சுவார்த்தையொன்றிலும் கலந்துகொள்கிறார். இதன்போது, இலங்கைக்கு நிதியுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
இதேவேளை 10, 11ஆம் திகதிகளில் ரியாத் நகரில் இலங்கை வாழ் மக்களை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள், கல்வி மற்றும் சமூக அமைப்புகள், விளையாட்டு மற்றும் இளைஞர் கழகங்கள் சார்பாக இலங்கை மக்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், எம்.எச்.எம். சல்மான், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அமைச்சின் உயரதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.


Comments
Post a Comment