தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் : பஷீரிடம் வாக்குமூலம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் தவி­சாளர் பஷீர் சேகு­தா­வூ­திடம் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு நேற்று விஷேட விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுத்­தது.

முஸ்லிம் காங்கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம். சல்மான் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பா­டுகள் மீதான விசா­ர­ணைகள் தொடர்­பி­லேயே நேற்று சுமார் மூன்று மணி­நேரம் வரையில் இந்த விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. தெமட்­ட­கொ­டையில் உள்ள கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் தலை­மை­ய­கத்­துக்கு அழைக்­கப்­பட்டு அங்கு வைத்தே பஷீர் சேகு­தா­வூ­திடம் இவ்­வி­சா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸலாம் தொடர்பில் ‘தாருஸ்­ஸலாம் மறைக்­கப்­பட்ட மர்­மங்கள்’ எனும் நூலொன்று கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் தாருஸ்­ஸலாம் மீட்பு முன்­னணி எனும் அமைப்­பினால் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த நூலிற்கு எதி­ராக அக்­கட்­சியின் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின்) தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம்.சல்மான் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவில் முறைப்­பா­டொன்றை செய்திருந்­தார். இது தொடர்­பாக தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கு மாளி­கா­கந்தை பிர­தம நீதிவான் நீதி­மன்­றில் நிலு­வையில் உள்­ளது.

'தாருஸ்­ஸலாம் மறைக்­கப்­பட்ட மர்­மங்கள்' புத்­தகம் சமூ­கத்தில் பொய்­யான தக­வல்­களைப் பரப்பும் நோக்­கிலும் அர­சியல் தேவை கரு­தியும் ஒரு­சி­லரால் அச்­சி­டப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்து இம்­மு­றைப்­பா­டுகள் கொழும்பு குற்ற விசா­ரணைப் பிரிவில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இதன் பிர­காரம், விசா­ர­ணை­களை மேற்­கொண்ட கொழும்பு குற்ற விசா­ரணைப் பிரி­வினர், மாளி­கா­கந்தை நீதிவான் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­தி­ருந்­தனர்.

கடந்த தவணை இந்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்­த­போது, தாருஸ்­ஸலாம் மறைக்­கப்­பட்ட மர்­மங்கள் புத்­த­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் வேறொரு நீதி­மன்­றத்தில் விசா­ரணை இடம்­பெற்று வரு­வ­தா­கவும், அதில் முக்­கிய சில அர­சி­யல்­வா­தி­களின் பெயர்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நீதி­மன்றில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

  இந்நிலையில் குறித்த தாருஸ்­ஸலாம் மறைக்­கப்­பட்ட உண்­மைகள் தொடர்பில் முழு­மை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க நீதி­மன்றம் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வுக்கு உத்­த­ர­விட்­டி­ருந்­தது. இந்நிலை­யி­லேயே நேற்று இது தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.

 தனது சட்­டத்­த­ரணி ஊடாக நேற்று அங்கு நண்­பகல் வேளையில் பிர­சன்­ன­மான அவ­ரிடம் சுமார் மூன்று மணி­நேரம் வரை விசா­ரணை செய்­யப்­பட்டு வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­டது.

 கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொய்ஸா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரதிலக மற்றும் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா ஆகியோரின் கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

Comments