கிண்ணியாவில் நோன்புடன் விசேட துஆ பிரார்த்தனை


கிண்ணியா உலமா சபை ஏற்பாடு செய்த விசேட துஆப் பிரார்த்தனை இன்று (14) மாலை கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம் பெற்றது.
தற்போது ஏற்பட்டிருக்கும் டெங்கு நோய் காரணமாக அதிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டி இவ்விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.

இதில் கிண்ணியா பொதுமக்கள் மத்ரசா மாணவர்கள், பெண்கள், புத்திஜீவிகள் மௌலவிகள் ஹாபிழ்கள் என பலரும் பங்கேற்றதுடன் துஆப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர் .

பெரும்பாலானோர்கள் இதில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.

Comments