புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பதவிப்பிரமாணம்
இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் கடந்த 2015 ஜனவரி 30 ஆம் திகதி தனது கடமையைப் பெறுப்பேற்றார். பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் கடந்த 28 ஆம் திகதியுடன் ஓய்வுபெற்ற நிலையிலேயே பிரியசாத் டெப் 45 ஆவது நீதியரசாராக இன்று பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபையின் நிறைவேற்றுக் குழுவுக்கு இரு நீதியரசர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு அதில் ஒருவரை நீதியரசராக தெரிவு செய்யுமாறு கோரப்பட்டிருந்தது. சிரேஷ்ட நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் கே.டி. சித்ரசிறி ஆகியோரின் பெயர்களே நிறைவேற்றுக்குக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டன.
இந் நிலையில் புதிய பிரதம நீதியரசரை தெரிவு செய்வதற்கான அரசியலமைப்பு பேரவையின் நிறைவேற்றுக் குழு கூடி, பிரதம நீதியரசராக பிரியசாத் டெப்பை தெரிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு சிபாரிசு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று 45 ஆவது பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ளார்.
இதேவேளை, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பதவியேற்றுள்ளதாக குறிப்பிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment