(வீடியோ).,ஓட்டமாவடி யுனைட்டட் விளையாட்டு கழகத்திற்கு சாட்டோ.வை.எல்.மன்சூரினால் ஒரு தொகை நிதி கையளிப்பு..

(ihzana fareed)

ஓட்டமாவடி பிரதேசத்தில் இயங்குகின்ற விளையாட்டு கழகங்களை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற சிறந்த விளையாட்டு வீரர்களை ஒருங்கிணைத்து பிரதேசத்திற்கான வலுவான விளையாட்டு கழகமாகவும் ஏனைய மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள திறமையான விளையாட்டு கழகங்களுடன் போட்டியிட கூடிய வகையிலும், ஓட்டமாவடி பிரதேசத்திற்கு பெருமை தேடித்தரும் வகையிலும் ஓட்டமாவடியில் யுனைட்டட் விளையாட்டு கழகம் எனும் பெயரில் விளையாட்டு கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையிலே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யுனைட்டட் விளையாட்டு கழகத்தின் வளர்சிக்காகவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சாட்டோ வை.எல்.மன்சூரினால் ஒரு தொகைப் பணம் நேற்று 13.03.2017 திங்கட் கிழமை கையளிக்கப்பட்டது.

குறித்த நிதியினை முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினரும் பிரதேசத்தில் எதற்கும் பயப்படாமல் துடிப்புடன் அரசியல் விமர்சகராக செயற்பட்டு வரும் முஹாஜிரீன் ஆசிரியரின் வீட்டில் வைத்து கழக நிருவாகத்திடம்  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்குடா மத்திய குழுவின் செயலாளர் எம்.எஸ்.எம்.பசீரினால் உத்தியோக பூர்வமாக கையளிக்கபட்டதுன் பிரதேசத்தில் உள்ள சமகால அரசியல் மற்றும் இன்னோரன்ன முக்கிய விடயங்கள் சம்பந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

Comments