டெங்கு காய்ச்­ச­லினால் தோப்­பூரில் ஒருவர் பலி




திரு­ம­லையில் பலி­யானோர் தொகை 16 ஆக அதி­க­ரிப்பு

தோப்பூர், அல்லை நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெங்கு காய்ச் சலினால் பாதிக்­கப்­பட்டு நேற்­றை­ய­தினம் மர­ண­மானார்.

திரு­ம­ண­மாகி ஒரு மாத­மே­யான 25 வய­தான முகம்­மது  நுபைர் என்­ப­வரே இவ்­வாறு கால­மா­ன­வ­ராவார்.

இவ­ருடன் கிண்­ணி­யாவில் 12 பேரும்  திரு­கோ­ண­ம­லையில் ஒரு­வரும், குச்­ச­வெ­ளியில் ஒரு­வ­ரு­மாக திரு­மலை மாவட்­டத்தில் டெங்கு காய்ச்­ச­லினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் தொகை 15 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இதே­வேளை நேற்­று­முன்­தினம், ஞாயிற்­றுக்­கி­ழமை திரு­கோ­ண­மலை பள்ளத் தோட்­டத்தைச் சேர்ந்த கர்ப்­பி­ணிப்பெண் (29) டெங்கு நோயின் கார­ண­மாக சிகிச்சை பய­னின்றி திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் மர­ண­மானார். 

கர்ப்­பப்­பைக்கு வெளியே கர்ப்பம் தரித்­தி­ருந்த குறித்த பெண்­னிற்கு டெங்கு நோயும் தாக்­கி­யி­ருந்­ததன் கார­ண­மாக சிகிச்சை மிகவும் கடி­ன­மாக இருந்­தாக மருத்­து­வர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

அத்­துடன் கடந்த வியா­ழக்­கி­ழமை, திரு­கோ­ண­மலை,  சண்முக வித்தி­யா­ல­யத்தில் கல்வி பயிலும் 6 வயது சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்தார். 

திரு­கோ­ண­மலை, உவர்மலை பிர­தே­சத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்ட குறித்த சிறுமி அனுரா­த­புரம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் திருகோணமலையில் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் தொகை 16 ஆக அதிகரித்துள்ளது.

Comments