வீடியோ).,அரசியலுக்குள் நாபீர் பெளண்டேசன் எதற்காக கால் பதிக்கின்றது.? விளக்கமளிக்கின்றது பெளண்டேன்

(Ihzana Fareed)

பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சேவையாற்றுவதற்கு முன்வர வேண்டும். அப்போதுதான் மக்கள் மனங்களில் என்றும் அழியாதவர்களாக போற்றப்படுவார்கள் என்ற அடிப்படை அம்சங்களை வைத்தே நாபீர் பெளண்டேசன் எதிர் கால அரசியலுக்குள் கால்பதிப்பதாக பெளண்டேசனின் சம்மாந்துறை பிரதேச கட்டுமான முகாமையாளர் ஜிஃப்ரி, மத்திய குழு உபதலைவர் றியாழ், இளைஞர் அமைப்பின் தலைவர் தானீஸ் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக சமூக சேவையில் பல வருடங்கள் ஈடுபட்டு வந்த நாபீர் பெளண்டேசனானது அம்பாறை மாவட்டத்தில் அரசியலுக்குள் கால் பதிப்பதன் முக்கிய நோக்கம்… பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்கள் சேவைக்காக அதிகாரத்திற்கு வருவதற்காக பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் சத்தியப்பிரமாணத்துடன் அதிகாரத்திற்கு வந்து பின்னர் மக்களை மறந்து தனது ஊர், பிரதேசம், மக்கள் என்ற பாகுபாட்டுடன் செயற்படுவது 

வேதனையளிக்கின்றது. இவ்வாறான வங்குரோத்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வெறுமனே சேவை செய்யவில்லை. அதற்கான ஊதியத்தையும் நிரப்பமாகவே பெறுகின்றனர். ஆனால் தமது கடமையில் பொடுபோக்காக இருக்கின்றனர். இது எந்த வகையிலும் நியாயம் கற்பிக்கப்பட வேண்டிய விடயமாக எவராலும் பார்க்க முடியாது. ?

அரசியல்வாதிகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் தனக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வாக்குப் பிச்சை கேட்டு அலைந்து திரிகின்றனர். ஏழை மக்களின் வாக்குகளை சூரையாடிய பின்னர் அதிகாரத்துடன் தனக்கு வாக்களித்த மக்களை மறந்து குறிப்பிட்ட காலத்திற்கு சொகுசு வாழக்கை வாழ்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். ஒரு சிறந்த அரிசியல்வாதி மக்களோடு மக்களாக எந்நாளும் ஒன்றித்து இருக்க வேண்டும். சுக துக்கங்களில் பங்கெடுத்து தனிப்பட்ட பொதுத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மக்கள் அவர்களை அடுத்த தேர்தல் வரும்போது நிராகரிப்பார்கள். மீண்டும் மக்கள் ஏமாறாதிருக்க இவ்வாறான அரசில்வாதிகளுக்கு வாக்களிக்காமல் சிறந்தவர்களை அதிகாரத்தில் அமர்த்த வேண்டும். மக்களின் குறைகளை நிறைவேற்றுபவனே சிறந்த தலைவனும் ஆட்சியாளனுமாவான் என எமது பெளண்டேசனின் தலைமை ஆணித்தரமாக கூறுகின்றது.

அதிகாரிகளை எடுத்துக்கொண்டால் தமது அதிகாரத்தை தமது இனம், மதம், பிரதேசம் என்ற வேறுபாடின்றி பிரயோகிக்க வேண்டும். பொறுப்பு வாய்ந்த பதவி என்பது ஒரு அமானிதம். அதனை நன்றாக பயன்படுத்த வேண்டும். சில அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வது மற்றும் பொடுபோக்கு என்ற பல்வேறு விடயங்களை தன்னகத்தே கொண்டு பணியாற்றுவதனால் சிறந்த சேவையை அவர்களால் வழங்க முடியாது.

கல்வித்துறையில் அம்பாறை மாவட்டத்தின் குறிப்பாக கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் திருக்கோயில் ஆகிய வலயங்களை எடுத்துக்கொண்டால் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது. அதில் முக்கியமானது ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினையாகும். ஒரு பிரதேசத்தின் ஆசிரியரை அதே பிரதேசத்திலேயே சேவையாற்ற முடிந்தளவு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் திருப்திகரமான சேவையை அவரால் வழங்க முடியும். இந்நிலை தற்போது இப்பிரதேசங்களில் இல்லை. முறையற்ற ஆசிரியர் இட மாற்றம் இடம் பெறுவதனால் பிரதேச மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனை உணர்ந்து ஆசிரியர்களின் சொந்தப் பிரதேசங்களில் அவர்களை சேவைக்கு அமர்த்த வேண்டும்.

எமது அமைப்பின் கல்விக் குழு இந்த விடயத்தில் பல்வேறு முன்மொழிவுகளை யோசனையாக எதிர்காலத்தில் முன்வைக்க உள்ளோம். அதன்படி குறைகள் களைந்து செயலாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். தவறும் பட்சத்தில் எமது அமைப்பு இந்த விடயம் தொடர்பாக நீதிமற்றம் செல்வதற்கும் தயங்காது என்பதிலும் எமது பெளண்டேசன்  தெளிவாக இருந்து வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாரிய பிரச்சினைகளாக வைத்தியத்துறை, கல்வித்துறை ஆகியன பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருகிறது. குறிப்பாக சம்மாந்துறை பிரதேச வைத்தியத்துறையும், கல்வித்துறையும் சிறப்பாக தமது கடமைகளை நிறைவேற்ற முயல வேண்டும். இதனை எமது பெளண்டேசன் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இங்குள்ள பாரபட்சங்கள் களையப்பட்டு சிறப்பாக இயங்குவதற்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் முன்வர வேண்டியது மிகக் கட்டயாய தேவையாக இருக்கின்றது. இவ்வாறான முக்கிய விடயங்களுக்கு தீர்வினை அரசியல் ரீதியாக பெற்றுக்கொடுப்பதற்காகவே நாபீர் பெளண்டேசன் தங்களது சமுக சேவைகளுக்கும் ஒரு படி மேலான சிந்தனையுடன் அரசியலில் கால்பதிக்கும் முடிவினை எடுத்து அதற்கான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக செய்து வருகின்றது என தெரிவிக்கின்றது நாபீர் பெளண்டேசன்.

Comments