பேச்சுவார்த்தை இல்லை என்றால் சர்வாதிகார ஆட்சியே அமையும்!


அரசியல் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதில் தாமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவசரம் காட்டப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் புரட்சியை நினைவுகூரும் வகையில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

அரசியல் மறுசீரமைப்புக்கள், தற்போது முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தை ஊடாகவே ஏற்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரத்தின் பின்னர் அரசியல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும் என சோசலிசத் தலைவர்கள் கோரிய போது, அவற்றை மெதுவாக முன்னெடுக்கலாம் என மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க கூறியிருந்தார்.

அதேபோன்று காலத்துடன் நாமும் மெதுவாக பயணிப்போம். தேவை ஏற்படின் துரித கதியில் செல்ல முடியும்.

அனைத்து கட்சிகளும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும். அல்லாவிடின் எதிர்காலத்தில் சர்வாதிகார ஆட்சியே அமையும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Comments