மு.கா. கொழும்புக் கிளையின் ஆணி வேர்!
(ihzana fareed)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஆலமர விருட்சத்துக்கு பசளை சேர்க்கும் கட்சிப் போராளிகள், அதன் வளர்ச்சிக்குத் திரைமரைவில் மேற்கொள்ளும் பங்களிப்பு போற்றத்தக்கது.
கிழக்கு மாகாணத்துக்கு வெளியே முஸ்லிம்கள் செறிந்து வாழும் கொழும்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஆணிவேராக ஊன்றுவதற்கு முக்கிய பங்காளியாக இருந்தவர்கள் பலர். அதில் மேல்மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாமுடீனுக்கு தனிச்சிறப்புள்ளது.
தனது அரசியல் பயணத்தை முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஒர் இனம் சார்ந்த கட்சியூடாகத் தொடர்ந்தாலும், சிங்கள, தமிழ் மக்களின் பேராதரவோடு தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடையாது தொடர்ந்தும் 15 வருடங்களாக அரசியல் நீரோட்டத்தில் தனக்கென நல்ல பெயரையும் இடத்தையும் தேடிய இளம் அரசியல் தலைமை. கிழக்கு மாகாணத்துக்கு வெளியே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய புள்ளி அர்ஷாட் என்றால் அதுமிகையாகாது.
2017ஆம் ஆண்டுடன் தனது 15 வருட அரசியல் வாழ்க்கையைப் பூர்த்தி செய்யும் மேல்மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாமுடீன் தனது அரசியல் வாழ்க்கையை எவ்வாறு ஆரம்பித்தார் எனப் பார்ப்போம்.
அஷ்ரபால் மு.காவுக்குள் ஈர்க்கப்படல்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் தலைவர் அஷ்ரப் தேசிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தார். மருதானை ஸாஹிராக் கல்லூரிக்கு முன்பாக ஜும்மா தொழுகையையடுத்தே பெரும்பாலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்திய சமாதானப் படைக்கு எதிராக 1889 ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரப்பினால் இவ்வாறானதொரு கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது, 16 வயது நிரம்பியிருந்த அர்ஷாட் நிஷாமுடீன் ஜி.சீ.ஈ. சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு அவ்வாறே தானும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
குறித்த தினத்தில் தலைவர் அஷ்ரப் ஆற்றிய உரையால் கவரப்பட்ட அவர், தன்னையும் மு.காவின் போராளியாக இணைத்துக் கொண்டார். அடிமட்டத்தில் இருந்த சுறுசுறுப்பு மிக்க இளைஞர் போராளியாகத் தலைவர் அஷ்ரபால் இவர் இனங்காணப்பட்டார்.
அரசியலில் ஈடுபடுத்திய ஹக்கீம்
தலைவர் அஷ்ரப்பின் மறைவைத் தொடர்ந்து கட்சியின் தலைமைப்பீடத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏற்றார். அப்போது, கட்சிக்குள் ஏற்பட்ட ஏராளமான பிரச்சினைகளுக்கு மத்தியில் உள்ளூராட்சித் தேர்தலும் ஹக்கீமுக்கு பெரும் சவாலாக வந்தது. அப்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வண்ணாத்திப் பூச்சி சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்ததுடன், கொழும்பு மாவட்டத்தில் தனித்து களமிறங்கவும் தீர்மானித்தது.
2002 வரை கட்சியின் அடிமட்டப் போராளியாக இருந்த அர்ஷாட் நிஷாமுடீனை உள்ளூராட்சித் தேர்தலில் களமிறக்குவதன் ஊடாக அரசியலில் ஈடுபடுத்த கட்சித் தலைமை தீர்மானித்தது.
28 வயது துடிதுடிப்பான இளைஞராக இருந்த அர்ஷாட் நிஷாமுடீன் தான் களமிறங்கிய முதலாவது தேர்தலிலேயே அமோக வெற்றி பெற்றார். அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ் ஆறு உறுப்பினர்களுடன் கொழும்பு மாநகர சபையை ஆக்கிரமித்தது.
தான் சார்ந்த சமூகத்துக்கு சேவையாற்றக்கூடிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அர்ஷாட், முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது தமிழ், சிங்கள மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றார். இதனால், 2006 கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் இலகுவாக வெற்றிபெற்ற அர்ஷாட் இரண்டாவது தடவையாகவும் மாநகர சபைக்குத் தெரிவானார்.
இந்நிலையில், 2009 மாகாண சபைத் தேர்தலில் சவால் நிறைந்த கொழும்பு மாவட்டத்தில் மு.கா. தனித்து போட்டியிட்டதுடன் அர்ஷாட் நிஷாமுடீனை போட்டியிட வைக்க கட்சித் தலைமை தீர்மானித்தது. பணப் பலம் இல்லா விட்டாலும் மக்கள் பலத்தின் ஆதரவோடு முதலாவது மாகாண சபைத் தேர்தலிலேயே மாகாண சபைக்குத் தெரிவானார்.
அர்ஷாட் ஐயா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அர்ஷாட், மக்களோடு மக்களாக கீழ் மட்டத்தில் இருந்தே அரசியல் செய்து வருபவர். அவரது அரசியல் வாழ்க்கையில் 2009க்குப் பின்னர் பாரிய திருப்புமுனையாக அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விளங்கினார்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் தனி மனிதனாக முட்டி மோதி பல இன்னல்களுக்கு முகம் கொடுத்ததை கொழும்புவாழ் மக்கள் இன்றும் நினைவுகூருகின்றனர்.
கோட்டா அர்ஷாட் மோதல்
நகர அபிவிருத்தி அதிகார சபையைத் தனது கைக்குள் வைத்து கொழும்பில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை அகற்றி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, விசேடமாக சிறுபான்மை மக்கள் செறிந்து வாழ்ந்த பல பகுதிகளை இலக்காக வைத்து செயற்பட்டு வந்தமை மறைக்க முடியாது உண்மை.
அந்தவகையில், கொம்பனி வீதி மியூஸ் வீதியில் அமைந்துள்ள 22 வீடுகளைக் கொண்ட கொலனி, 2010 ஆம் ஆண்டு அகற்றப்பட்டு அக்காணி பாதுகாப்பு கல்லூரிக்கு வழங்கப்பட்டது. வீடுகளை இழந்த அம்மக்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படாத நிலையில் கடும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதற்கு ஆரம்பத்தில் பல அரசியல்வாதிகள் ஆதரவாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வரை அதனை முன்னெடுக்கவில்லை. இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொழும்பில் வாக்குரிமை இல்லாதிருந்தும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி அம்மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க அர்ஷாட் முன்னின்று போராடி வெற்றியும் கண்டார்.
போராட்டத்தைத் தனது அதிகாரத்தைக் கொண்டு கோட்டாபய முடக்கிய போது, அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கைத் தொடர்வதற்கான பண உதவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கெம்பனி வீதி மஸ்ஜித் சம்மேளனம் அர்ஷாட் நிஷாமுடீனுக்கு பெற்றுக்கொடுத்து பக்கபலமாகவும் இருந்தது.
இவ்வழக்கின் தீர்ப்பு 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெமட்டகொட
மாடிக்குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கட்டளைப்பிறப்பித்தது. எனினும், அதிகாரத்தில் இருந்த கோட்டா அம்மக்களைப் பழிவாங்கும் நோக்குடன் அதனை வழங்காது காலத்தைக் கடத்தினார். மீண்டும் அம்மக்களுக்காக குரல் எழுப்பி வந்த அர்ஷாட் இறுதியில் ஆட்சி மாற்றத்துடன் அம்மக்களது பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுத்தார். 2016ஆம் ஆண்டு கடைசிப்பகுதியில் அம்மக்களுக்கான வீடுகள் மாளிகாவத்தை பிரதீபா மாவத்தையில் வழங்கப்பட்டன.
உயிர் அச்சுறுதல்
மியூஸ் வீதி பிரச்சினை மட்டுமல்லாது, கோட்டாவின் பல செயற்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்தும் போராடிய அர்ஷாட் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.
கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மியூஸ் வீதி மக்களுக்காக நீதிமன்றம் சென்ற அர்ஷாட், குறுகிய காலம் தலைமறைவாக இருக்கவேண்டியும் ஏற்பட்டது. அவரது தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டதுடன் பல தடவை வெள்ளை வானில் கடத்தவும் முயற்சிசெய்யப்பட்டன. தனது உயிரை துச்சமென மதித்து மக்களுக்காக அவர் அன்று செய்த அர்ப்பணிப்புகள் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டுவருகின்றன.
மீண்டும் வெற்றி
கோட்டா அர்ஷாட் இடையேயான முறுகல் பலமடைந்திருந்த காலப்பகுதியில் 2014 மாகாண சபைத் தேர்தல் எதிர்கொண்டது. இத்தேர்தலில் அர்ஷாடை வீழ்த்த பல சதிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அனைத்தும் முறியடிக்கப்பட்டு இரண்டாவது தடவையாகவும் அமோக வெற்றியும் மேல்மாகாண சபை உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
ஏமாற்றம்
அரசியலில் தொடர் வெற்றிகளைக் குவித்த அர்ஷாட், அடுத்த கட்ட அரசியலுக்கு உட்பிரவேசிக்க வேண்டும் என அவரைச் சூழவுள்ள மக்கள் எதிர்ப்பார்த்தனர். அதற்கான சந்தர்ப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்திக் கொடுக்கும் என அவர்கள் நம்பியிருந்தனர். எனினும், இறுதியில் அம்மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அர்ஷாட் மு.காவின் மரச்சின்னத்தில் தனியாகவோ அல்லது யானைச் சின்னத்தில் ஐ.தே.கவில் இணைந்தோ போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டது. எனினும், கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கவில் போட்டியிட பலர் முண்டியடித்தமையால் மு.கா. தலைமை கொழும்பு மாவட்டத்தில் தனித்தோ அல்லது இணைந்தோ போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்தது.
அத்தீர்மானம் அர்ஷாட்டின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்திருந்தது. இருந்தாலும், கட்சித்தலைமையின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதே உண்மையான போராளி எனும் மூல மந்திரத்துக்கு கட்டுப்பட்டார் அர்ஷாட்.
மனிதநேயப் பணி
இவ்வாறான நிலையில் 2016ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக கொழும்பின் பல பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதன்போது, தனது சகாக்களுடன் வெல்லம்பிட்டிய, கொலன்னாவ பகுதிகளில் மீட்புப் பணிகளில் களமிறங்கிய அர்ஷாட் மக்களோடு மக்களாக இணைந்துபணிபுரிந்தமை அனைவராலும் பாராட்டப்பட்டது.
உண்மையான அரசியல் வாதி இவரைப்போன்றே இருக்கவேண்டும் என அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்ட அர்ஷாட், வெள்ளத்துக்குப் பின்னர் அப்பகுதியில் சுத்தம் செய்யும் பணிகளிலும் முன்னின்று செயற்பட்டார். அப்போது முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட நிவாரணப் பணிகளை அர்ஷாடிடம் ஒப்படைத்து மேலும் ஊக்குவித்தது.
வெள்ளத்துக்குப் பின்னரான சுத்தம் செய்யும் பணிகளில் எந்தவித எதிர்பார்புமின்றி தனது வேலைகளை எல்லாம் புறம்தள்ளி முழு மூச்சாக செயற்பட்ட அர்ஷாட் இறுதியில் தொற்றுநோயால் அவதிப்பட்டார். அவர் மாத்திரமின்றி அவரது செயலாளர் றியாஸ் கபூர் உள்ளிட்ட அவரது சகாக்கள் பலரும் தொற்று நோய்க்கு இலக்காகி மிகுந்த அவதிப்பட்டனர்.
எதிர்காலப் பயணம்
கட்சித் தலைமைக்கு அழுத்தம் பிரயோகிக்காது தலைவரின் கட்டளையை வேத கட்டளையாக மதித்து செயற்பட்டு வரும் அர்ஷாட் போன்றவர்களை முஸ்லிம் காங்கிரஸ் சரியான விதத்தில் பயன்படுத்துவதில்லை; தக்க இடம் வழங்குவதில்லை என்பது மறைக்க முடியாத உண்மை. எதிர்காலத்திலாவது அதனை நிவர்த்தி செய்து கட்சிக்குள் தகுந்த இடத்தை வழங்க கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2002 ஆம் ஆண்டு அர்ஷாட்டுடன் நகரசபைக்கு பிரவேசித்த ஒருவர் கூட இன்று கட்சியில் இல்லை. அன்று முதல் இன்று வரை கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் விசுவாசமாகவுள்ள அர்ஷாட் மேலும் பல அரசியல் சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதே அனைவரினதும் எதர்பார்ப்பாகும்.

Comments
Post a Comment