காத்தான்குடி இளைஞர் கழக சம்மேளனத்திற்கு சாட்டோ மன்சூரினால் ஒரு தொகை நிதி கையளிப்பு


தேசிய இளைஞர்கள் மற்றும் சர்வதேச இளைஞர்கள் 7000 பேர் ஒன்று கூடும் வளமான நிகழ்வே யுவன் புரய. இந் நிகழ்வு 2017 ஆண்டு பிரதமர் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் அதன் பணிப்பாளர் நாயகம் எரந்திக அவர்களின் தலைமையில் திருகோணமலை நகரத்தில் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 29.03.2016 புதன்கிழமை தொடக்கம் 02.04.2016 வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 300 இளைஞர் யுவதிகள் மற்றும் அதிகாரிகள் பங்குபற்றுகின்றனர்.

இதற்கமைவாக காத்தான்குடி இளைஞர் உத்தியோகத்தர்களினதும் இளைஞர் கழக சம்மேளனத்தின் அழைப்பின் பெயரிலும் வேண்டுகோளுக்கு அமைவாகவும் சமூக ஆர்வலரும் முன்னாள் கல்குடா தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சாட்டோ வை.எல்.மன்சூரினால் ஒரு தொகைப்பணம் கையளிக்கப்பட்டது. குறித்த தொகைப்பணமானது கடந்த 27.03.2017 திங்கட் கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வைத்து உதவி பிரதேச செயலாளர் முன்னிலையில் வைத்து காத்தான்குடி இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்களிடம் சட்டோ மன்சூரினால் கையளிக்கப்பட்டது  

மேலும் 1996 காலப்பகுதியில் கல்குடா பிரதேசத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தோடு இணைந்து சம்மேளன தலைவராக, முதலாவது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தனது சமூகப் பணியை ஆரம்பித்த சாட்டோ மன்சூர் கோறளைப் பற்று மத்தி மற்றும் மேற்கு சம்மேளனங்களுக்கு தேவையான நிதியினை சம்மேளன தலைவர்களிடம் இதற்கு முன்னர் கையளித்திருந்தமையும் முக்கிய விடயமாகும். அந்த வகையிலேயே பிரதேசம் தழுவிய ரீதியில் காத்தன்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கும் குறித்த நிதி உதவி மன்சூரினால் வழங்கப்பட்டுள்ளது.




Comments