ஒரு வாரத்திற்குள் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு தீர்வு
எம்.எஸ்.எம்.நூர்தீன்
முதலமைச்சரிடம் பிரதமர் உறுதியளிப்பு
ஒரு வாரத்திற்குள் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு சாதகமான தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண பட்டதாரிகள் மற்றும் கிழக்கின் ஆளணி வெற்றிடங்கள் என பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.அத்துடன் இதன் போது கிழக்கு மாகாண பட்டதாரிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் துயர நிலை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதமருக்கு விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
கிழக்கு மாகாண பட்டதாரிகளின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை முதலமைச்சர் பிரதமரிடம் நேரில் கையளித்த துடன், கிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை தற்போதுள்ள பட்டதாரிகளைக் கொண்டு நியமித்து விட்டு ஏனையோரை பயிற்சி அடிப்படையில் உள்வாங்குவது தொடர்பிலும் பிரதமரிடம் வலியுறுத்திக் கூறப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் முழுமையான தரவுகள், விடயதானங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச வெற்றிடங்கள் ஆகியவற்றை முழு அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிழக்கு முதலமைச்சருக்கு இதன் போது பணிப்புரை விடுத்தார்.
இது தொடர்பான அறிக்கையை இன்றைய தினத்திற்குள் பிரதமரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்தப் பிரச்சினையை ஒரு தீவிரமான பிரச்சினையாகக் கருதி இந்த வாரத்திற்குள் ஒரு சாதகமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் உறுதியளித்ததார்.
அத்துடன் இது தொடர்பான விடயங்கள் குறித்து தொடர்பு கொள்வதற்கு பிரதமர் அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரியொருவரை நியமித்துள்ளார்.கடந்த எட்டு நாட்களாக வெயில், மழை பாராது போராட்டங்களை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாண பட்டதாரிகளை வாக்குறுதிகளுடன் சந்திப்பதை விடுத்து சாதகமாக தீர்வொன்றுடனே நேரில் சந்திப்பதாக உறுதி பூண்டிருக்கிறேன். அதன் ஒரு கட்டமாகவே பிரதமரை சந்தித்தேன்.
இதனடிப்படையில் ஒரு வாரத்திற்குள் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு சாதகமான தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.அது மாத்திரமன்றி, கிழக்கில் அரச முதலீடுகளின் ஊடான புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் தொடர்பான யோசனையொன்றும் இதன் போது பிரதமரிடம் முன்வைத்துள்ளேன் என்றார்.

Comments
Post a Comment