திருகோணமலை டெங்குக்கு எதிராக களம் இறங்கும் தெளஹித் ஜமாத்


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண டெங்கு நுளம்பின் வளர்ச்சியால் கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் நாடு பூராவும் 16479 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.கொழும்பு மாவட்டத்தில் 4136 நபர்களும், கிழக்கு மாகாணத்தில் 1421நபர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

அதிகரிக்கும் டெங்கு அபாயத்திலிருந்து மக்களை விழிப்புணர்வூட்டி பாதுகாக்கும் பொருட்டு, மார்ச் 16 முதல் ஏப்ரல் 04 வரை 20 நாட்கள்
” டெங்கு ஒழிப்பு வாரமாக”
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரகடணம் செய்து நாடு முழுவதும் களப்பணியாற்ற தொடங்கியுள்ளது .

அந்த வகையில் எதிர்வரும் 18.03.2017 சனிக்கிழமை முழுவதும் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் டெங்குக்கு எதிராக களப்பணியாற்ற ஸ்ரீறிலங்கா தெளஹித் ஜமாஅத் தீர்மானித்துள்ளது.

இக் களப்பணிக்காக அதிக அளவில் தொண்டர்கள் தேவை என்பதால் எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் இக்களப்பணிக்கு செல்ல விரும்பும் சகோதரர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்

மாவட்ட தொண்டர் அணிச் செயலாளர். 0778479182

மாவட்ட சமூக சேவை செயலாளர். +94754343155

இப்பணிக்கு செல்வதற்காக பிரத்தியேகமாக பிரயாண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

அன்புடன்
Acm.சப்றாஸ்
செயலாளர்
ஸ்ரீறிலங்கா தெளஹித் ஜமாஅத்
மட்டக்களப்பு மாவட்டம்

Comments