மறிச்­சிக்­கட்டி - மாவில்லு - வெப்பல் - விளாத்­திக்­குளம் - பெரி­ய­மு­றிப்பு


பாது­காக்­கப்­பட்ட வன­மாக ஜனா­தி­ப­தியால் பிர­க­டனம்
வில்­பத்து சர­ணா­ல­யத்­துக்கு வடக்கே அமைந்­துள்ள 04 பாது­காக்­கப்­பட்ட வனங்­களை பிர­க­ட­னப்­ப­டுத்தும் வர்த்­த­மானி அறி­வித்­தலில் ஜனா­தி­பதி கையெ­ழுத்­திட்டார்.

வில்­பத்து தேசிய சர­ணா­ல­யத்­துக்கு வடக்­கே­யுள்ள வன பாது­காப்பு திணைக்­க­ளத்­துக்­கு­ரிய அனைத்து வனப்­ப­கு­தி­களும் இணைக்­கப்­பட்டு தனி­யான பாது­காக்­கப்­பட்ட வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய வில்­பத்து தேசிய சர­ணா­ல­யத்­துக்கு வடக்­காக அமைந்­துள்ள வன பாது­காப்பு திணைக்­க­ளத்­துக்­கு­ரிய மாவில்லு, வெப்பல், மறிச்­சிக்­கட்டி, விளாத்­திக்­குளம், பெரி­ய­மு­றிப்பு ஆகிய பாது­காக்­கப்­பட்ட வனங்கள் இணைக்­கப்­பட்டு வன பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் ‘3அ’ பிரிவின் கீழ் ‘மாவில்லு பாது­காக்­கப்­பட்ட வனம்’ என பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன தனது ரஷ்ய விஜ­யத்­தி­னி­டையே கையொப்­ப­மிட்டார்.

இவ்­வாறு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட காடு­களின் எல்­லை­களை மாற்ற வேண்­டு­மாயின் வன பாது­காப்பு கட்­டளை சட்­டத்­துக்­க­மைய விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­சரால் தயா­ரிக்­கப்­பட்ட உத்­த­ரவு ஜனா­தி­ப­தியால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு, பாரா­ளு­மன்­றத்­தினால் நிறை­வேற்­றப்­பட்டு வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்ட பின்­னரே மேற்­கொள்­ளலாம்.

அதற்­க­மைய மேற்­கு­றித்த வனத்­துக்­கான உச்ச சட்­ட­பூர்வ பாது­காப்பு மேலும் உறு­திப்­ப­டுத்­தப்­படும்.

வில்­பத்து சர­ணா­லயம் மற்றும் அத்­துடன் இணைந்­துள்ள வனப்­ப­கு­தியில் அத்­து­மீ­றிய காட­ழிப்பு இடம்­பெ­று­வ­தாக கடந்த காலங்­களில் பல்­வேறு ஊட­கங்கள் தெரி­வித்­தி­ருந்­தன.

இருந்த போதிலும் இது தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் போது 2012/2013 காலப்­ப­கு­தியில் விடு­விக்­கப்­பட்­டுள்ள வன காணி­க­ளுக்கு மேல­தி­க­மாக ஏனைய காடுகள் துப்­ப­ரவு செய்­யப்­ப­ட­வில்­லை­யென தெரி­ய­வந்­துள்­ளது.

இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் 2016-.12-. 30 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுடன் இணைந்ததாக உள்ள காடுகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காக, பாதுகாக்கப்பட்ட வனங்களாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

Comments