வில்பத்து தொடர்பில் அதாவுல்லா வெளியிட்டுள்ள அறிக்கை
நல்லாட்சியின் சொந்தங்களாம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
#வில்பத்து – #வில்லங்கம்
வில்பத்து விவகாரம் தொடர்பாக, நல்லாட்சியை உருவாக்குவதற்கு அரும்பாடு பட்டதாகக் கூறும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் அனைவரும் நல்லாட்சியின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களையும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களையும் உடனடியாக சந்தித்து வில்பத்து வில்லங்கத்திற்கு சுமூகமான முடிவு காண்பதே முதற்கட்ட நகர்வாகும்.
இது உங்களுடைய கடமையும் கூட.
மாறாக வழமைபோல் மக்களை சூடாக்கி மேலும் இனவிரிசல்களை உருவாக்கும் நடவடிக்கைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
தலைவர் – தேசிய காங்கிரஸ்


Comments
Post a Comment