பாடசாலை மாணவர்கள் ஆறு பேர் கைது!
பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த ஆறு மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அநுராதபுரம் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் தற்போது அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
காதல் விவகாரம் தொடர்பிலேயே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் க.பொ.த. உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்களே கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அநுராதபுரம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Comments
Post a Comment