கச்சதீவு யாருக்கு சொந்தமென்ற  நாடகம் முடிவுற்றது!


தமிழகத்திற்கு சொந்தமென கூறி முன்னாள் முதவர் ஜெயலலிதாவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை அவர் காலமாதால் தொடர்ந்து வழக்கை நடாத்த முடியாதென கூறி வழக்கு இன்று முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார்.இந்திய பிரதமராக இந்திரா காந்தி.

இதனால் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தினர்.இந் நிலையில்

கச்சத்தீவு தமிழகத்தின் ஒருப்பகுதி எனவும், அதனை மீட்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த 1998-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுமார் 19காலம் இழுத்தடிப்பிற்குள்ளான இந்த வழக்கு  விசாரணைக்கு எடுக்கப்பட்டு

இவ்வழக்கு தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது மனு தொடர்ந்த ஜெயலலிதா காலமாகிவிட்டதால் இனிமேல் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என நீதிபதி செல்லமேஸ்வர்  உத்தரவிட்டுள்ளார்.

Comments