கிண்ணியா மண் அழுகிறது: துயர்துடைக்க வாருங்கள்
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் 31 கிராமசேவகர் பிரிவை உள்ளடக்கிய முஸ்லீம் சனத்தொகை அடர்த்தியைக் கொண்ட பிரதேசம் கடந்த இரண்டரை மாதங்களாக டெங்கு நோய் தாக்கம் தற்போது தீவிரமடைகின்றன கிண்ணியா தளவைத்தியசாலையின் அவசரப்பிரிவிக்கு டெங்கு நோயாளர்கள் பட்சிலம் குழந்தைகள் உயிருக்காக போராடுகின்றன தாய் அழுகுரல் பின்னர் அம்பியூலன்ஸ் சத்தம் கிண்ணியா மக்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.
திருகோணமலையை நோக்கியவாறு அடுத்த நிமிடம் குழந்தையின் மரணசெய்தி டெங்குவின் தீவிரம் கிண்ணியா சமூகத்தை சோகத்தில் மீண்டும் மீண்டும் துயர்துடைக்க வைக்கின்றன இரு சிறுவர்கள் உட்பட கிண்ணியாவில் 13 மரணங்கள் கர்ப்பிணிப் பெண்களும் இருவர் அடங்குகின்றன .
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிண்ணியா மண் சுமந்த டெங்கு நோயாளர்கள் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையிலும் கிண்ணியா தளவைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் வைத்தியசாலையில் இடநெறுக்கடி ஒருபுறமிருக்க மலசலகூட வசதிகள் பற்றாக்குறை உட்பட பல்வேறு சிரமங்களுடன் நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்கள் நாளுக்கு நாள் 50 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் டெங்குவினால் அனுமதிக்கப்படுகிறார்கள்.
டெங்கு தீவிரத்தைக் கட்டுப்படுத்த படையினர்கள் உட்பட சமூக அமைப்புக்கள் களமிறங்குகின்றமையும் இவர்களுக்கான நன்றியினையும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுகாதார அமைச்சின் தகவல்கள் டெங்கு நோய் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது டெங்கு ஒழிப்பு தீவிர நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத் கூறியுள்ளார்.
இதற்காக வெளியில் இருந்து வைத்தியர்கள் சுகாதாரபரிசோதகர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார் .இது தவிர கிண்ணியா வைத்தியசாலைக்கு அரசியல் குழுக்கள் கூட விஜயம் மேற்கொள்கின்றமையும் குறிப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் குழு அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழு முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான குழு உட்பட உயர் அதிகாரிகள் தனியார் நிறுவனங்கள் பலர் வருகை வைத்தியசாலைகளின் குறைபாடுகளை பார்வையிடுகின்றமையும் குறிப்பிட்டுக் கூறலாம் இருந்தபோதிலும் நோயாளர்களின் குறைபாடுகள் தீர்க்கப்படவில்லை நேரடியாக சென்று பார்த்தால் நிலை தெரியும்


Comments
Post a Comment