கிண்ணியா தள வைத்தியசாலையின் மருந்து களஞ்சியமாக குளிரூட்டப்பட்ட கன்டைனர்கள் பயன்படுத்தப்படவுள்ள

(maroof nifras)

கிண்ணியா வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய நிலையம் தற்போது தற்காலிக நோயாளர் அரையாக பயன்படுத்தப்படுவதன்  காரணமாக மருந்துகளை சேகரிப்பதிலும் வினியோகம் செய்வதிலும் கிண்ணியா வைத்தியசாலை பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றது,

இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு 2 கன்டைனர்களை கொள்வனவு செய்து அவற்றை தற்காலிக மருந்து களஞ்சியமாக பயன் படுத்தும் பொருட்டு அனைத்து நடவடிக்கைகளும் பா.உ.M.S.தெளபீக் அவர்களினால் கடந்த 06/03/2017ம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது, இரண்டு கன்டைனர்களுக்குமான மொத்த ஒதுக்கீடு ரூபா பத்து இலட்சம் என்பதுடன் இதற்கான விலை மனுவும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன் குறைந்த விலை மனு வழங்கிய Hybrid Homes 2 வாரங்களில் இந்த 2 கன்டைனறையும் கிண்ணியா வைத்திய சாலைக்கு வழங்க இருக்கின்றது.

 இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பா.உ.M.S.தெளபீக் அவர்களே மேற்கொண்டார் என்பதை யாராவது மறுத்தால் அவர்களுக்கு நான் உரிய ஆதாரங்களை வழங்க தயாராக இருக்கின்றேன்.

Comments