(வீடியோ).,நாபீர் பெளண்டேசன் முஸ்லிம் காங்கிரசினை விமர்சிக்கவில்லை.. அதன் தலைமை ஹக்கீமையே விமர்சிக்கின்றது….
(ihzana fareed)
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு அம்பாறை மாவட்டத்தில் வாக்களிக்கின்ற மக்கள் கட்டாயம் சிந்திக்க கடமைப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். நிகழ் காலத்தில் சர்வதிகாரத்தினுடன் செயற்பட்டு வரும் தலைமைத்துவத்தின் தேவைப்பாடு முஸ்லிம் சமூகத்திற்கு தேவைதான என்பதே வாக்களிக்கின்ற மக்களினுடைய பிரதான கேள்வியாக இருக்க வேண்டும். நாங்கள் ஒரு பொழுதும் முஸ்லிம் காங்கிரசிற்கு எதிரானவர்களோ அல்லது அதனை அழிக்க முற்படுகின்றவர்களாகவோ செயற்பட்டதில்லை.
மாறாக முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமை வடகிழக்கிலுள்ள முஸ்லிம் களின் மன நிலைமையினை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்பதில் நாபீர் பெளண்டேசன் மும்முரமாக சமூகத்தின் மத்தியில் செயற்பட்டு வருகின்றது. என்னுடைய பார்வையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமையும், அதனுடைய சிந்தனையும் வடகிழக்கிற்கு வெளியே இருக்கின்றதே தவிர வடகிழக்கிற்கு உள்ளே ஒரு பொழுதும் இருந்ததில்லை என்பதேயே முக்கிய விடயமாகஅவதானித்து வருகின்றோம்.. என நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபகர் நாபீர் ஹாஜியியிடம் எதற்காக சமூக சேவைகள் செய்து வருகின்ற உங்களுடைய அமைப்பானது திடீரென அரசியல் கட்சிகளையும் அதன் உறுப்பினர்களையும் விமர்சித்து வருகின்றது என்ற கேள்விக்கே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தினை தெரிவித்த நாபீர் பெளண்டேசன்.. எங்களுடைய பெளண்டேசனாது கட்சிக்கு எதிரான கருத்துக்களையோ, கட்சிக்கு எதிரான செயற்பாடுகளையோ அல்லது கட்சிக்கு எதிரான விமர்சனங்களையோ முன்னெடுக்கவில்லை. மாறாக வாக்களிக்கூட்டிய மக்களின் வாக்குகளை பெற்று அதன் மூலம் சுக போகங்களை அனுபவிக்கின்றவர்கள் வாக்களித்த மக்களுக்காக எதனை செய்துள்ளார்கள் என்பதையே விமர்சிக்கப்பட வேண்டிய ஆயுதமாக கையில் எடுத்துள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும், 33000 வாக்குகளை அம்பாறை மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசும், அதே போன்று தனக்கென ஒரு வாக்கு வங்கியினை வைத்திருக்கும் தேசிய காங்கிரஸ் ஆகிய முன்று கட்சிகளும் அம்பாறை மாவ்வட்டத்தில் தனக்கென அரசியல் இருப்பினை வைத்துள்ள கட்சிகளாகவே பார்க்கப்படுகின்றது. அதில் முக்கியமாக இரண்டு கட்சிகளினுடைய தலைவர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருந்தும் இவர்களால் அம்பாறை மாவடத்திற்கு ஏதும் அபிவிருத்திகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பதே எங்களுடைய பிரதான கேள்வியாகும்.
இவர்களால் அம்பாறை மாவட்டத்து மக்களுக்காக செய்துள்ள சேவைகளை பட்டியலிட்டு கூற முடியுமா? அல்லது முஸ்லிம் காங்கிரசினால் எத்தனை நியமனங்கள் வாக்களித்துள்ள மக்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது என்று பகிரங்மாக கூற முடியுமா? ஒரு அமைச்சின் கீழ் செயற்படுகின்ற பல்வேறு தினைக்களகங்கில் எத்தனை பெயருக்கு அம்பாறை மாவட்டம் சார்பாக வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய பிரச்சனையாக இருக்கின்ற காணி பிரச்சனையினை எவ்வாறு தீர்த்து வைத்துள்ளார்கள்?
இவ்வாறு பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்ற பொழுது இவர்களெல்லாம் மெளனிகளாக இருந்து விட்டு தேர்தல்கல் வருகின்ற பொழுது அங்கே பிரச்சனை இருக்கின்றது. இங்கே பிரச்சனை இருக்கின்றது என்று கூச்சலிடுவதுடன், தேர்தலில் முக்கிய ஆயுதமாக கரையோர மாவட்ட கோரிக்கையினை தூக்கி பிடிக்கின்றார்கள். தேர்தல் முடிந்தற்கு பிற்பாடு கரயோர மாவட்டமும் இல்லை தனியான அலகுமில்லை. இதற்கு எமது மக்களை எவ்வாறு பழிக்காடாக்கி தேர்தல் காலங்களில் எவ்வாறு உசுப்பேத்தி விடுவது என்ற வித்தைகளை அவர்களுடைய கைவந்த கலையாகவே பயண்டுத்தி வருகின்றார்கள்.
பாராளுமன்றத்திற்கு மக்களினுடைய பிரச்சனைகள் சம்பந்தமாக பேச அனுப்பட்டவர்களால் இது வரை காலமும் மக்களினுடைய முக்கிய பிரச்சனையாக இருக்கின்ற இருப்பு சம்பந்தமான பிரச்சனைகளைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசியிருப்பார்களா என்பதை ஆதங்கத்துடன் முன்வைக்கின்றேன். அமைச்சர் றிசாட் பதுர்டீன் பாராளுமன்றத்திலே வன்னியினுடைய பிரச்சனைகளை பற்றி பேசுகின்ற பொழுது அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான வாக்குகளை பெற்றுள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களினுடைய இருப்பு சம்பந்தமான பிரச்சனைகளை பற்றி பேசாமல் இருப்பதற்கான காரணம் என்ன?
இதற்காகத்தான் இன்று நாபீர் பெளண்டேசனாது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று ஒரு குடையின் கீழ் ஒற்றுமைப்பட்டு மக்களுக்காக சேவை செய்வதற்கு முன்வர வேண்டும் என வேண்டி நிற்கின்றது. எனவே எல்லா முஸ்லிம் அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொது அமைப்பின் கீழ் எதிரே வருகின்ற தேர்தல்களில் களமிறங்குகின்ற பொழுது எங்களுடைய சகல விடயங்களையும் இலகுவாக சாத்தித்துகொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டில் நாபீர் பெளண்டேசன் உறுதியாக இருப்பாதாக தெரிவித்தார் அதன் இஸ்தாபக தலைவர்.
மேலும் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவருடைய விரிவான கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment