முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை – ரிஸ்வி முப்தி


முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் அந்தக் காலத்தில் சரி­யா­கவே எழு­தப்­பட்­டுள்­ளது.

அந்தச் சட்ட வரைபு சிறப்­பாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் சட்­டத்தில் மாற்­றங்கள் தேவை­யில்லை. சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் விட­யத்­திலே கட்­டுப்­பா­டுகள் கொண்டு வரப்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ர்சு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மை­யி­லான குழு, அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் பத்வா குழு­வினைச் சந்­தித்து இறு­தி­யாகக் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

குழுவில் அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் தலை­வரும் பொதுச் செய­லா­ளரும் அங்கம் வகிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். கடந்த 19 ஆம் திகதி இடம்­பெற்ற குழுவின் அமர்­விலும் அவர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
‘அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபை தெளி­வான நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கி­றது. ஷரீஆ சட்டம் மனி­தர்­க­ளுக்குத் தீங்­கி­ழைக்கக்கூடிய சட்­ட­மல்ல. ஆனால் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்போது சில சிக்­கல்கள் ஏற்­ப­டலாம். அவ்­வா­றான சிக்­கல்­க­ளுக்குத் தீர்­வு­க­ளா­கவே திருத்­தங்கள் அமைய வேண்டும்.

ஷரீஆ சட்டம், முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் என்­ப­ன­வற்றின் அடிப்­ப­டை­களை அநேகர் அறி­யா­துள்­ளனர். மக்­களே தெளி­வில்­லாமல் இருக்­கி­றார்கள். எனவே இதுபற்றி மக்கள் தெளிவூட்­டப்­பட வேண்டும்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் காதி நீதி­மன்­றங்கள் சில சவால்­களை எதிர்­கொள்­கின்­றன. இது கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்டும்.

சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ர்சு செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு உலமா சபையின் பத்வா குழு­வினைச் சந்­தித்து இறு­தி­யாக ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளமை வரவேற்கத்தக்கதாகும்.

முஸ்லிம் சமூகத்துக்காக எமது முன்னோர்கள் வடிவமைத்துத் தந்துள்ள இச்சட்டத்தையும் காதி நீதிமன்ற முறைமையையும் பாதுகாத்துக் கொள்வது எமது கடமையாகும்’ என்றார்.
.

Comments

  1. Alhamdhulillah, I welcome the speech of Honourable President of Jamiyathul Ulamaa Asheih Moulavi Rizvi Mufthi. As he mentioned no one can find fault on Shareeah Law.So we cannot adjust or modify any laws with any contradiction to Holy Qur'aan and Hadheez.
    May Allah almighty bless all those who give their effort to protect Islamic Shareeah Law with Thaquvaa and Ihlaas.

    ReplyDelete
  2. Alhamdhulillah, I welcome the speech of Honourable President of Jamiyathul Ulamaa Asheih Moulavi Rizvi Mufthi. As he mentioned no one can find fault on Shareeah Law.So we cannot adjust or modify any laws with any contradiction to Holy Qur'aan and Hadheez.
    May Allah almighty bless all those who give their effort to protect Shareeah Law with Thaquvaa and Ihlaas.

    ReplyDelete
  3. Alhamdhulillah, I welcome the speech of Honourable President of Jamiyathul Ulamaa Asheih Moulavi Rizvi Mufthi. As he mentioned no one can find fault on Shareeah Law.So we cannot adjust or modify any laws with any contradiction to Holy Qur'aan and Hadheez.
    May Allah almighty bless all those who give their effort to protect Shareeah Law with Thaquvaa and Ihlaas.

    ReplyDelete

Post a Comment