முச்சக்கர வண்டியை திருடி வைத்திருந்தவர் எட்டு மாதங்களின் பின் கைது
(ihzana fareed)
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியொன்றினை திருடி வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று செவ்வாய் கிழமை(9) உத்தரவிட்டார்.
கந்தளாய் ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டி பகுதியில் திருடிக் கொண்டு வைத்திருந்த நிலையில் சந்தேக நபர் கந்தளாய் நகரில் சென்ற போது போக்குவரத்து பொலிஸார் நிறுத்தி சோதனை மேற்கொண்ட போதே திருட்டு முச்சக்கர வண்டியென கண்டறியப்பட்டதாகவும்,சந்தேக நபரையும் புதன்கிழமை (8) பகல் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய(9) போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment