பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்!


பாராளுமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்துள்ளார்.

பாராளுமன்றில் சபை நாகரிகத்தையும் ஒழுக்க விதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், பாராளுமன்றுக்குச் சமுகமளிக்கும்போதும் அவையில் பேசும்போதும் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற சபையின் ஹன்ஸார்ட் குறிப்புகளைத் தாம் ஆராய்ந்ததாகவும், அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்து ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் கருத்துக்களைத் தெரிவித்திருந்ததாகவும், இதையடுத்தே பாராளுமன்ற உறுப்பினர்களைத் தாம் எச்சரித்ததாகவும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

சபையின் நிலையான விதிகளில், உறுப்பினர்களின் நடத்தை குறித்துத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அவை சபையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments