தம்புள்ளை பள்ளிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற பொதுக்கூட்டம்
தம்புள்ளை புனித பூமிக்குள் முஸ்லிம்களின் பள்ளிவாசலோ ஏனைய மதத்தவர்களின் மதஸ்தலங்களோ இருக்கக் கூடாது. அவற்றை உடனடியாக அரசு அகற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தம்புள்ளையில் நேற்று எதிர்ப்புக் கூட்டமொன்று நடத்தப்பட்டது.
மகாசேன பலகாய எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் சுமார் 20 பௌத்த குருமார் கலந்து கொண்டதுடன் 75 வீதமானோர் பௌத்த சமயப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளாவார்கள்.
தம்புள்ளையில் முஸ்லிம்கள் அதிகமாக உழைத்து பணத்தை தமது ஊர்களுக்குக் கொண்டு செல்கிறார்கள். தம்புள்ளையில் இருக்கும் சிங்களவர்கள் தாம் உழைக்கும் பணத்தில் மது அருந்தி வாழ்க்கையைச் சீரழிக்கிறார்கள். இந்நிலையை மாற்றியமைக்க நாமனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
நாட்டில் அமுலிலுள்ள தேவாலகம் சட்டத்தை அமுல்படுத்தி புனித பூமியில் இருக்கும் பள்ளிவாசல்களையும் ஏனைய மதஸ்தலங்களையும் அகற்ற வேண்டும் என்று கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டம் தம்புள்ளை விகார சந்தியில் மக்கர தொரணவுக்கு அருகில் இடம்பெற்றது.


Comments
Post a Comment