கிண்ணியா : உயிர் குடிக்கும் டெங்கு...

.


.

கிண்­ணி­யாவில் அடுத்­த­டுத்து மர­ணங்கள் .இதனால் எங்கும் மரண ஓலங்கள். நோயா­ளர்­களால் வைத்­தி­ய­சாலை நாளாந்தம் நிரம்பி வழி­கின்­றது. ஒரு கட்­டிலில் இருவர் மூ­வ­ராகப் படுத்து சிகிச்சை பெறு­கின்ற காட்­சியும், நிலத்தில் பாயை விரித்துப் படுத்து சிகிச்சை பெறு­கின்ற காட்­சியும் மனித நேய­முள்ள அனை­வ­ரையும் கண் கலங்க வைக்கும் நிகழ்­வு­க­ளாகும்.

சிறு­வர்கள், இளை­ஞர்கள் பெண்கள், பெரி­ய­வர்கள் என்று எவ­ரையும் இந்தக் கொடிய டெங்கு நுளம்பு விட்டு வைக்­க­வில்லை.  மக்கள் எந்த நேரமும் பீதி­யுடன் அடுத்­த­டுத்து  என்ன நடக்கப் போகி­றது? அடுத்து யார் மர­ணிப்­பாரோ? இதி­லி­ருந்து விடு­தலை பெற முடி­யாதா? என்ற அச்­சத்­து­டனும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். 

கிண்­ணியா கடந்த காலங்­களில் பல அனர்த்­தங்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளது. பயங்­க­ர­வாதம், வெள்ளம்,  சுனாமி போன்­ற­வற்றைக் கண்ட கிண்­ணியா மக்­க­ளுக்கு தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் சோதனை பாரிய டெங்கு நோயாகும். இதுவும் கிண்­ணியா வர­லாற்றில் ஏற்­பட்ட ஒரு மறக்­க­மு­டி­யாத  சோகமாகும். 

இக் கட்­டுரை எழு­தப்­படும் வரை 12 பேரை பலி­யெ­டுத்­தது மாத்­தி­ர­மன்றி தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ரித்து வரு­வது மேலும் மேலும் மக்­களின் இயல்பு வாழ்க்­கையை பாதித்துக் கொண்­டிக்­கி­றது.

செய்­வ­த­றி­யாது மக்கள் குழம்­பிப்போய் இருக்­கி­றார்கள்.
பெற்­றோர்கள், பிள்­ளை­களை பாட­சா­லை­க­ளுக்கு அனுப்ப மறுக்­கி­றார்கள். இதனால் கிண்­ணியா வல­யத்தில் உள்ள 66 பாட­சா­லை­க­ளுக்கு அவ­ச­ர­கால விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ளது. தனியார் கல்வி நிலை­யங்கள், அரபுக் கல்­லூ­ரிகள் அனைத்தும் கால­வ­ரை­யறை இன்றி மூடப்­பட்­டுள்­ளன. இறைவா கிண்­ணியா சமூ­கத்தை பாது­காப்­பா­யாக என்று பள்­ளி­வா­யில்­களில் ஐந்து நேரத் தொழு­கை­ளிலும் விஷேட பிரார்த்­த­னைகள் நடக்­கின்­றன. இந்த சோத­னையிலிருந்து விடு­வித்து, எங்­க­ளுக்கு நலவைப் பெற்­றுத்தா இறைவா என மக்கள் தினமும் பிரார்த்­திக்­கி­றார்கள். நோன்பு நோற்­கி­றார்கள்.

மறு­பக்கம் இந்த டெங்கு காய்ச்சல் ஏன் வந்­தது? எப்­படி வந்­தது? எப்­ப­டித்தான் வந்­தாலும்  இந்­த­ளவு மர­ணங்கள் நிக­ழ­லாமா? இதற்­கெல்லாம் பொறுப்­பு­தா­ரிகள் யாராக இருப்­பார்கள்? மக்­களா? அல்­லது வைத்­தி­யர்­களா? அல்­லது வைத்­தி­ய­சா­லையா? அல்­லது அதி­கா­ரி­களா? அல்­லது அர­சி­யல்­வா­தி­களா? அல்­லத வேறேதும் கார­ணங்­களா? என்­றெல்லாம் மக்­களை பல்­வேறு தொடர்­பாடல் வடி­வங்­களில் சிந்­திக்­கவும் பேசவும் வைத்­தி­ருக்­கின்­றது. அந்த வகையில் டெங்கு நோயின் மர­ணங்கள் குறித்து இவர்கள் என்ன சொல்­கி­றார்கள் என்று பார்ப்போம். 

ஏ.ஆர்.எம்.பரீட் (ஓய்­வு­பெற்ற பிரதிக் கல்விப் பணிப்­பாளர்)
கிண்­ணி­யாவின் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கேற்ப வைத்­தி­ய­சா­லைக்கு தேவை­யான இட வச­தி­களும் ஆய்­வு­கூட  வச­தி­களும் இங்கு இல்லை. சுனாமி அனர்த்­தத்­துக்குப் பிறகு புதிய இடத்தில் காணியின் அள­வுக்­கேற்ப கட்­டப்­பட்ட வைத்­தி­ய­சாலைக் கட்­ட­டம்தான் இப்­போதும் இருக்­கி­றது. அதன் பிறகு எந்­த­வி­த­மான அபி­வி­ருத்­தியும் இங்கு ஏற்­ப­ட­வில்லை. இப்­போது இங்கு ஏற்­பட்­டி­ருக்­கின்ற நிலை­மையில் வைத்­தி­ய­சா­லையில் ஆய்­வு­கூட வச­திகள் பெரிய குறை­பா­டாக இருக்­கின்­றது.

வைத்­தி­ய­சா­லையில் இரத்தப் பரி­சோ­தனை நடை­பெற்­றாலும் நெருக்­கடி நிலை­மையால் பல நோயா­ளர்கள் வெளி­யி­லேயே பரி­சோ­தனை செய்ய வேண்­டி­யி­ருக்­கி­றது. ஏனெனில் டெங்கு நோயாளி ஒருவர் பல தடவை இரத்தப் பரி­சோ­தனை செய்ய வேண்­டி­யி­ருக்­கி­றது. 

ஒரு டெங்கு நோயாளி ஓய்­வெ­டுக்க வேண்டும். ஆனால் ஒரு கட்­டிலில் இரண்டு, மூன்று பேர் என்று சிகிச்சை பெறு­கின்ற நிலை­மையில் இவர்­களை எவ்­வாறு பரா­ம­ரிப்­பது என்­பதில் வைத்­தி­ய­சாலை நிர்­வாகம் திண­றிக்­கொண்­டி­ருக்­கி­றது. இவர்­களை பரா­ம­ரிக்கச் செல்­கின்­ற­வர்கள் 24 மணி நேரமும் நிற்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

கட்­டில்கள்,படுக்­கைகள், மருந்­துகள் என்று உத­விகள் எது வந்­தாலும் மர­ணங்­களைக் தடுக்க முடி­யாதே. மக்­களின் தொகைக்கு ஏற்ப வைத்­தி­ய­சா­லைக்கு இட வசதி வேண்டும்.

மௌலவி ஏ.எம்.ஹிதா­யத்­துல்லா (தலைவர்,கிண்­ணியா மஜ்லிஸ் அஷ் ஷூறா)
இது ஒரு பெரிய சனத் தொகைக்கு சொந்­த­மான ஒரு வைத்­தி­ய­சாலை. இதனை மத்­திய அர­சாங்­கத்தின் கீழ் கொண்டுவர வேண்­டி­யது காலத்தின் தேவை. அல்­லது இதனை அபி­வி­ருத்தி செய்­வ­தோடு, ஆலங்­கேணி, காக்­கா­முனை, கச்­சக்­கொ­டித்­தீவு போன்ற பிர­தேச வைத்­தி­ய­சா­லை­களை தரமுயர்த்தி அப­ிவி­ருத்தி செய்ய வேண்டும்.

தற்­போது மாவட்­டத்தின் ஏனைய பகு­தி­க­ளுக்கும் இந்தக் காய்ச்சல் பரவிக் கொண்­டி­ருக்­கின்­றது. 15  நாட்­ளுக்கு மேலாக சிர­ம­தா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தாலும் இன்னும் நுளம்புக் குடம்­பிகள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன. இந்த நிலையில் ஒரு முறை­யான வேலைத்­திட்­டத்­தினை அமுல்­ப­டுத்த வேண்­டிய தேவை இருக்­கின்­றது. இதனைச் செய்­வ­தற்கு அவ­சரகால நிலை­மையை பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்டும். 

அபூ­சாலிஹ் ஐயூப்கான் (ஆசி­ரியர்)
சரி­யான வைத்­தி­ய­சாலை முகா­மைத்­துவம் இல்­லா­மையே மர­ணங்­க­ளுக்குக் காரணம் என மக்கள் கரு­து­கின்­றனர். எனவே சரி­யான முகா­மைத்­துவம் தேவை.  இங்கு  24 மணி நேரமும் தியா­கத்­தோடும் அர்­ப­ணிப்­போடும் சேவை செய்­கின்ற வைத்­தி­யர்­களும் இருக்­கி­றார்கள். கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அள­வுக்கு நோயா­ளர்­களால் விடு­திகள் நிரம்பி வழி­கின்­றது.

இந்த நேரத்தில் பிர­தேச வைத்­தி­யர்கள் ஓரிரு தினங்­க­ளா­வது   தங்­ளது பிரத்­தி­யேக டிஸ்­பென்­ச­ரி­களை மூடி­விட்டு வார்ட்­டு­க­ளுக்குச்  சென்று அங்கு மிக கஷ்­டத்­துக்கு மத்­தியில் பணி­பு­ரிந்து வரு­கின்ற வைத்­தி­யர்­ளுக்கும் தாதி­யர்­க­ளுக்கும் உதவ முடி­யும்­தானே. அவ்­வாறு செய்­தி­ருந்தால் நோயா­ளர்கள் உரிய முறையில் பரா­ம­ரிக்­கப்­பட்­டி­ருப்­பார்கள்.  இதன் மூலம் மர­ணங்­களை தவிர்­தி­ருக்­கலாம் அல்­லவா. 

உள்ளுர் வைத்­தி­யர்­க­ளுக்கு  நன்­மை­களைச் சம்­பா­திக்­கின்ற சந்­தர்ப்­பத்தை இறைவன் கொடுத்­தி­ருக்­கின்றான். “நாம் இங்கு கஸ்­டப்­ப­டு­கிறோம். ஆனால் அவர்கள் சொந்த மக்­களை மறந்து நேரம் வந்­த­வுடன் போய்­வி­டு­கி­றார்கள்” என இரண்டு பெரும்­பான்­மை­யின வைத்­தி­யர்கள் தங்­க­ளுக்குள் பேசிக் கொண்ட போது  எனது காதில் விழுந்­ததை இங்கு ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கிறேன்.

கடமை நேரத்­துக்கு அப்­பாலும் ஊர் வைத்­தி­யர்கள் பணி­பு­ரிய வேண்­டிய நேரம் இது. ஓரிரு உள்ளூர் வைத்­தி­யர்கள் இந்த தியா­கத்தைச் செய்­வதை மறக்கமுடி­யாது. அவர்­க­ளுக்கும் இறைவன் அருள்­பு­ரிய வேண்டும். 

அடுத்து வைத்­தி­ய­சா­லைக்கு உட­ன­டி­யாக வைத்­திய அத்­தி­யட்சகர் ஒருவர் நிய­மிக்­கப்­படல் வேண்டும். இவ்­வாறு நிய­மிக்­கப்­ப­டு­பவர் உணர்­வுடன் கட­மையைச் செய்­யக்­கூ­டி­ய­வ­ராக இருக்க வேண்டும். இட­மாற்­றங்­களில் அர­சியல் தலை­யீ­டுகள் இருக்­கக்­கூ­டாது.

எம்.எல். அன்சார் (சமுர்த்தி உத்­தி­யோ­கத்தர்)
முத­ல­ிவ­தாக 2010 இல் டெங்கு கிண்­ணி­யாவை ஆக்­கி­ர­மித்­தது. அப்­போது 3 மர­ணங்­க­ளோடு ஓரி­ரு­வா­ரங்­க­ளுக்குள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டது. அந்த நேரம் முறை­யான வடிகான் அமைப்பு இன்­மையே இதற்கு பிர­தான காரணம் என சுகா­தாரப் பகு­தி­யி­னரால் இனங்­கா­ணப்­பட்­டது. ஆனால் ஏழு வரு­டங்­க­ளா­கியும் எந்தவித­மான பரி­கார நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

அத­னு­டைய விளை­வுதான் இந்த மர­ணங்கள். இப்­போதும் காரணம் வடி­கான்­கள்தான் என்று பேசப்­ப­டு­கின்­றது. அடுத்த வருடம் இன்னும் 20 உயிர்­களை பலி­கொ­டுத்த பிறகும் அப்­போதும் வடி­கானைப் பற்­றித்தான் பேசப்­படும். ஆகவே மர­ணங்­க­ளுக்கு காரணம் வடி­கான்­களா ? தீர்­மானம் எடுப்­ப­வர்­களா? நீங்­களே முடிவு செய்து கொள்­ளுங்கள்.

எச் எம். சமீம் (பிர­தேச வைத்­திய அதி­காரி)
கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி முத­லா­வது டெங்கு நோயாளர் அடை­யாளம் காணப்­பட்டார். அன்­றி­லி­ருந்து மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரைக்கும் இனங்­கா­ணப்­பட்ட 1075 நோயா­ளர்கள் விடு­தியில் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெற்­றி­ருக்­கி­றார்கள். இதை விட 2 மடங்கு நோயா­ளர்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று குண­ம­டைந்­தி­ருக்­கி­றார்கள்.

சுனா­மிக்குப் பின்னர் அவ­சரத் தேவைக்­காக கட்­டப்­பட்ட இந்த வைத்­தி­ய­சாலை அதன் பின்னர் தள வைத்­தி­ய­சா­லை­யாக  தரம் உயர்த்­தப்­டட  போதும் ஒரு அங்­கு­ல­மேனும் கட்­டடம் கட்­டப்­ப­ட­வில்லை. மிகக் குறைந்­த­ளவு வச­தி­க­ளு­டனே மிகவும் சிர­மத்­துக்கு மத்­தியில் கொண்டு செல்ல வேண்­டி­யி­ருக்­கி­றது. ஒரு விடு­தியில் 12 தொடக்கம் 16 வரை­யான   கட்­டில்கள் மத்­தி­ரமே இருக்­கின்­றன.

கிண்­ணி­யாவில் மாத்­திரம் 80 ஆயிரம் மக்கள் வாழ்­கி­றார்கள். இந்த கட்­ட­டத்தை வைத்துக் கொண்டு சிறப்­பாக சேவையாற்ற முடி­யாது. இது தவிர பட்­ட­னமும் சூழலும், கந்­தளாய், தம்­ப­லா­கமம், மூதூர் இறால்­குழி பிர­தேச மக்­களும் இங்கு சிகிச்­சைக்­காக வரு­கின்­றனர்.
ஒரு நாளைக்கு 1500 பேர் வெளி நோயாளர் பிரி­வுக்கு வரு­கின்­றனர்.

இந்த நேரத்தில் ஆளணி, பௌதிக வள பற்றாக்குறைக்கு மத்­தி­யிலும் இரவு பக­லாக நாங்கள் சேவை­யாற்றிக் கொண்­டி­ருக்­கிறோம். இப்­போது இரவு 8 மணி வரைக்கும் வெளி நோயாளர்பிரிவு திறக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இரத்தப் பரி­சோ­தனை 24 மணி நேரமும் நடை­பெ­று­கின்­றது.

இவ்வாறானதொரு அனர்த்தம் நடைபெறும் போது எந்த வைத்தியசாலையாக இருந்தாலும் நோயாளர்களின்  எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். இருந்தும் இந்த வைத்தியசாலைக்கு இடவசதியை அதிகரிப்பது அவசியமானதொன்றாகும்.

இந்த மாவட்டத்தில் எந்தவொரு வைத்தியசாலையாக இருந்தாலும் தங்களால் ஒரு நோயாளியை பராமரிக்க முடியாத நிலை வரும் போது திருகோணமலை பொது வைத்தியசாலைக்குத்தான் அனுப்ப வேண்டும். அதைத்தான் இப்போது நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இது டெங்கு நோயாளர்களுக்கு மாத்திரமல்ல. 

ஒரு நாளைக்கு 600 தொடக்கம் 700 டெங்கு நோயாளிகளுக்கு இரத்தப் பரிசோதனை செய்கிறோம். இது மிக அதிகமானது. இந்த நிலையில் மத்திய, மாகாண சுகாதார அமைச்சுக்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் அடிக்கடி விஜயம் செய்கிறார்கள். இவர்களின் உதவியால் டெங்கு நோயாளர்களைக் கண்காணிப்பதற்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவு ஒன்று இன்னும் மூன்று தினங்களில் அமைக்கப்படவுள்ளது.

Comments