கிண்ணியாவில் பெண் வைத்தியருக்கு பாலியல் தொந்தரவு: இளைஞனுக்கு ஒரு வருட கடூழிய சிறை
ABDUL SALA ABDUL M YASEEM - TRINCO
கிண்ணியா தள வைத்தியசாலை பெண் வைத்தியருக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞனுக்கு ஒரு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் 1500 ரூபாய் தண்டம் செலுத்துமாறும் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று (23) உத்தரவிட்டார்.
இவ்வாறு தண்டம் விதிக்கப்ட்டவர் கிண்ணியா.பைசல் நகர் பகுதியைச்சேர்ந்த 30வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.
கடந்த வருடம் கடமையை முடித்து விட்டு விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது பாலியல் தொந்தரவு செய்ததாக பெண் வைத்தியரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
மூவரில் இருவர் குறித்து எதுவித சாட்கிகளும் இல்லையெனவும் பிரதான சந்தேகநபரான இளைஞன் குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் 1500ரூபாய் தண்டம் செலுத்துமாறும் ஒரு வருட கடூழிய சிறை தண்டனை ஜந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்ட்டுள்ளதுடன் குறித்த இளைுனுக்கு எந்தவித முறைப்பாடுகளும் இல்லாத பட்ஷத்தில் பெண் வைத்தியரிடம் பகிரங்கமாக நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளை செய்ய மாட்டேன் எனவும் நீதவான் முன்னிலையில் தெரிவித்தார்.
அத்துடன் பாதிக்கப்ட்ட பெண்னுக்கு நஷ்டயீடாக 5000ரூபாய் செலுத்துமாறு நீதிமன்றம் கூறியதையடுத்து பெண் வைத்தியர் தனக்கு வழங்கப்படுகின்ற அப்பணத்தை சிறுவர் இல்லத்திற்கு வழங்குமாறும் நீதிமன்றில் தெரிவித்தார்.

Comments
Post a Comment