தம்பலகாம  பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஓழிப்பு விழிப்புணர்வும் தெளியூட்டலும்.

(mahroo nifras)

தி/கிண்/அல் ஹிக்மா முஸ்லிம் மகா  வித்தியாலய மாணவர்களினால்

 இளைஞர்களிடையே பரவி வரும் கொடிய போதைப் பழக்கத்தை ஒழிக்கும் விதமாகவும், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்  பாடசாலை அதிபர்  தலைமையில்

  கொடிய போதைப் பழக்கத்தை விட்டொழித்து நல்வழியின் பக்கம் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுமெனவும் , மது, புகை பழக்கத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து வலியுறுத்தியும்   இவ் விழிப்புணர்வு நிகழ்வு   ஏற்பாடு செய்யப்பட்டது.

 இன் நிகழ்வில் பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும்  பாடசாலை ஆசிரியர்கள் SDC உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Comments