தமிழர்களுக்கு நியாயங்கள் வழங்காமையே அனைத்திற்கும் காரணம்!
யுத்தக் குற்றங்களை முழுமையாக ஆராய்ந்து அவை தொடர்பில் உரிய நகர்வுகளை மேற்கொண்டிருந்தால் இன்று சர்வதேச அழுத்தங்கள் காணப்பட்டிருக்காது.
அதற்கு அரசு அடிபணியத்தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்றையதினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் அந்த அறிக்கையில்,
தமிழ் மக்களும், தமிழர் சார்ந்த சர்வதேச அமைப்புக்களும் இன்று அரசிற்கு பல்வேறு உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட நெருக்குதல்களைக் கொடுத்து வருகின்றன. யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் வட.கிழக்கில் இராணுவத்தினை மட்டும் பலப்படுத்தாது பாதிக்கப்பட்ட மக்களையும் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும்.
அத்துடன் இதற்கு இந்த அரசாங்கம் மட்டுமல்லாது முன்னைய அரசாங்கமும் பொறுப்புக்கூறவேண்டும். மக்கள் இந்த அரசாங்கங்களில் நம்பிக்கை இழந்துள்ளனர். நாட்டு மக்களது நியாயங்கள் செவிசாய்க்கப்பட்டு அதற்கமைவாக அவர்களுக்கான அதிகாரங்களும் பொறுப்புக்களும் பகிர்ந்தளிக்கப்பட்டால் மாத்திரமே நாட்டில் அமைதி நிலவும்.
இந்நிலையில், நல்லிணக்கச் செயற்பாடுகள் வேறுகோணங்களில் முன்னெடுக்கப்படுவதுடன் அவை துரிதமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவே நாட்டின் பாதுகாப்பிற்கும் ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Comments
Post a Comment