அரிசியை இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம்!
சந்தையில் உள்ள அரிசியின் அளவு பற்றாக்குறையாக இருப்பதால் கூடுதலாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனால் கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் மூலம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் தோறும் 20 ஆயிரம் மெற்றிக் தொன் என்ற ரீதியில் கட்டம் கட்டமாக அரிசியை இறக்குமதி செய்து சதொச கிளைகள் ஊடாகவும் பகிரங்க சந்தையிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது எனவும்,
அரசாங்கம் ஏற்கனவே ஒரு இலட்சத்து 13 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளது.


Comments
Post a Comment