(வீடியோ).,குர்-ஆன் மத்ர்ஸாக்கு நாபீர் பெளண்டேசனினால் குர்-ஆன் பிரதிகள் அன்பளிப்பு..
ihzana fareed
சம்மாந்துறையில் 20 வருடகாலமாக முமு நேர ஹிஃப்ழு மத்ர்ஸாவாகவும், பகுதிநேர குர்-ஆன் மனன மத்ர்ஸாவாகவும், அரபு கலாசாலையாகவும் இயங்கி வருகின்ற மஃஹத் திராஸத்துல் இஸ்லாமியா அரபு கலாசாலைக்கு சமூக சேவை அமைப்பான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் பொறியியலாளர் அல்-ஹாஜ் நாபீரினால் ஒரு தொகை குர்-ஆன் பிரதிகள் நேற்று 28.03.2017 கையளிப்பு செய்யப்பட்டது.
மத்ர்ஸாவின் அதிபர் அதிபர் மெளவி அல்-ஹாஜ் றம்சீன் தப்லீக்கின் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் குர்- ஆன் பிரதிகள் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதுடன் மத்ர்ஸா நிருவாகத்தினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளான மாணவர்களின் கற்றலுக்கான கணணி தேவைப்பாட்டினை உடனடியாக 45 நாட்களுக்குள் முழுமையாக தீர்த்து தருவதாக பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார்.
அத்தோடு மேலும் முன்வைகப்பட்ட பல்வேறுபட்ட தேவைப்பாடுகளை எதிர்காலத்தில் காலதாமதம் இன்றி நிறைவேற்றி தருவதாக கூறியதுடன், குறித்த நிகழ்வில் பெளண்டேசனின் சார்பில் அதன் சம்மாந்துறை ஒழுங்கமைப்பு குழுவின் உபதலைவர் றியால் மற்றும் சாய்ந்தமருது அமைப்பாளர் ஜிஃப்ரி ஆகியோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வின் காணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்லது.



Comments
Post a Comment