(வீடியோ).,இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடந்த இறுதி போட்டியில் வாழைச்சேனை காஸா உதைப்பந்தாட்ட அணி சாம்பியனானது..


(ihzana fareed)
வாழைச்சேனை பிரதேசத்தில் கல்வி, விளையாட்டு, கலை, கலாசார துறையில் சமூக சேவையாளனாக செயற்பட்ட மர்ஹும் கலைஞர் மீராஷாஹிப்பின் நினைவாக இயங்கி வருகின்ற சமூக சேவைகள் அமைப்பான மீராஷாஹிப் பெளண்டேசனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுபோட்டிக்கான இறுதி போட்டியில் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை காஸா உதைப்பந்தாட்ட அணி சாம்பியனாது.
கடந்த 18.03.2017 சனிக்கிழமை இடம் பெற்ற குறித்த இறுதி போட்டியில் ஓட்டமாவடி யங்லயன்ஸ் விளையாட்டு கழகமும் வாழைச்சேனை காஸா விளையாட்டு கழகமும் பலப்பரீட்ச்சை நடாத்தியதில் தண்டனை உதைகளின் அடிப்படையில் காஸா அணி சாம்பியனானது.

மேலும் குறித்த நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்-ஹாபிழ் செய்னுலாப்தீன் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், முன்னாள் தவிசாளர் கேபிஎஸ்.ஹமீட் முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்குடா தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் வை.எல்.சாட்டோ மன்சூர், இன்னாள் அமைப்பாளர் லியாப்தீன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்களாக இறுதி போட்டி இரண்டு வருடங்களுக்கு பின்னர் இனிதே நடைபெற்று முடிந்தது.

மேலும் குறித்த நிகழ்வானது தங்கு தடையின்றி இடம் பெறுவதற்காக ஒரு தொகைப்பணம் சாட்டோ வை.எல்.மன்சூரினால் ஏற்கனவே கையளிக்கப்பட்டதுடன் . சாப்பியனான அணிக்கும் யங்லயன்ஸ் விளையாட்டு கழகத்திற்கும் பணப்பரிசில்களுடன் பெறுமதியான வெற்றிகேடயங்களும் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வினுடைய காணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

Comments